Top
undefined
Begin typing your search above and press return to search.

வங்காளத்தில் போனி ஆகாததால் இழுத்து மூடப்பட்ட 52 ஆண்டுகள் பழமையான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாள் காலந்தர்! அழிவின் விளிம்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி?

வங்காளத்தில் போனி ஆகாததால் இழுத்து மூடப்பட்ட 52 ஆண்டுகள் பழமையான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாள் காலந்தர்! அழிவின் விளிம்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி?

SG SuryahBy : SG Suryah

  |  1 Nov 2018 3:03 AM GMT

2014-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 543 லோக் சபா தொகுதிகளில் வெறும் 1 தொகுதியை மட்டுமே வென்றது இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சி. கேரளாவில் 19 எம்.எல்.ஏ-க்களும், மேற்கு வங்கத்தில் 1 எம்.எல்.ஏ-வும் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொத்த மக்கள் பிரதிநிதிகள். மற்ற அனைத்து மாநிலங்களிலும் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு அழிந்துவிட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
இந்த வீழ்ச்சியினால் தேசிய கட்சி அந்தஸ்தை எப்போதோ இழந்திருக்க வேண்டிய கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இருப்பினும் தேர்தல் ஆணையம் இறுதி வாய்ப்பாக 2019 மக்களவை தேர்தலில் கணிசமான இடங்களையும் வாக்குகளையும் பெற வேண்டும் இல்லையென்றால் தேசிய கட்சி அந்தஸ்து ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வங்காளத்தில் 52 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிக்கை காலந்தர், இன்று, நவம்பர் 1-ஆம் தேதி முதல் இழுத்து மூடப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி சித்தாந்தம் இந்தியா முழுவதும் அழிந்துவிட்ட நிலையில் வங்காளத்திலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கு அதளபாதாளத்திற்கு சென்று கேட்பார் அற்று கிடப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story