Top
undefined
Begin typing your search above and press return to search.

மக்களை அடிமைகளாக நடத்தும் கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் - உதவி பொருட்களை வீசி எறிந்த ஆணவம்

மக்களை அடிமைகளாக நடத்தும் கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் - உதவி பொருட்களை வீசி எறிந்த ஆணவம்

SG SuryahBy : SG Suryah

  |  1 Nov 2018 2:07 PM GMT

கர்நாடக மாநிலம் உத்திர கன்னடா மாவட்டம், ஹலியல் என்ற ஊரில், அரசு சார்பில் கட்டபட்டுள்ள விளையாட்டு மைதானத்தை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான அம்மாநில வருவாய் துறை அமைச்சர் தேஷ்பாண்டே நேற்று திறந்து வைத்தார். அதே விழாவில், விளையாட்டு வீரர்களுக்கு, பல்வேறு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அப்போது வேறு நிகழ்ச்சிக்கு அவசரமாக செல்ல இருந்த அமைச்சர், வீரர்களை மேடைக்கு வரவழைத்து நலத்திட்டப் பொருட்களை கொடுக்காமல், மேடையில் இருந்தே அவர்களை நோக்கி தூக்கி எறிந்தார். கர்நாடக காங்கிரஸ் அமைச்சரின் இந்த செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


https://twitter.com/BJP4Karnataka/status/1057658134544764929?s=20

இந்த வீடியோவைப் பகிர்ந்த பலரும் கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காகச் சென்ற அமைச்சர், பிஸ்கட் பாக்கெட்டுகளைத் தூக்கி எறிந்த சம்பவத்துடன் ஒப்பிட்டுள்ளனர். அந்த சர்ச்சையில் சிக்கியவர் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் சகோதரரும் பொதுப்பணித் துறை அமைச்சருமான எச்.டி.ரேவன்னா. தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருப்பவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆர்.வி. தேஷ்பாண்டே.


இவர் ஏற்கனவே கடந்த, 2003 - 04ல், தொழில்துறை அமைச்சராக இருந்தபோது, 'தொழில்துறை பார்க்' அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டிருந்த, 820 ஏக்கர் நிலத்தில், 139 ஏக்கர் நிலத்தை சட்ட விரோதமாக நில மறு அறிவிப்பு செய்துள்ளார். இதன் மூலம் அரசு கருவூலத்துக்கு இழப்பை ஏற்படுத்தி, அமைச்சர் பதவியின் செல்வாக்கை பயன்படுத்தி, தன் சொந்த லாபத்துக்காக நிலத்தை, நில மறு அறிவிப்பு செய்து உத்தரவு வெளியிட்டார். இதில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story