Top
undefined
Begin typing your search above and press return to search.

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

SG SuryahBy : SG Suryah

  |  1 Nov 2018 1:21 PM GMT

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் 2006-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்த போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது ஏர்செல் நிறுவனத்தில் ₹3,500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப் பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்கு பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ஏர்செல்-மேக்சிஸ் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது என்று தினகரன் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் பல நிலுவையில் இருப்பதால் உடனே விசாரிக்க முடியாது என்றும் கார்த்தி சிதம்பரம் நவ.3ம் தேதி வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மனு நாளை விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Next Story