Top
undefined
Begin typing your search above and press return to search.

காற்று மாசு அதீத அதிகரிப்பு : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுக்க தவறிய நிலையில் மத்திய அமைச்சர் துரித நடவடிக்கை எடுத்தார்

காற்று மாசு அதீத அதிகரிப்பு : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுக்க தவறிய நிலையில் மத்திய அமைச்சர் துரித நடவடிக்கை எடுத்தார்

SG SuryahBy : SG Suryah

  |  2 Nov 2018 6:20 PM GMT

மனிதர்கள் சுவாசிப்பதற்கு தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதை ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் அதாவது காற்று தர அளவீடு மூலம் நிர்ணயிப்பது வழக்கம்.இது 50-க்குள் இருந்தால் நல்ல காற்று, 51-100 என்ற அளவில் இருந்தால் திருப்தி, 101-200 மிதமானது, 201-300 மோசமானது, 301-400 மிக மோசமானது, 401-500 மிக மிக மோசமானது என்று பொருள். இந்த நிலையில் டெல்லியில் நேற்று முன் தினம் பகல்3 மணிக்கு இந்த அளவீடு 401 என்ற அளவை எட்டியது. சமீப காலத்தில் இந்த அளவுக்கு டெல்லியில் காற்று மாசுபட்டு தரம் குறைந்திருப்பது இதுவே முதல்முறை என தகவல்கள் கூறுகின்றன.


காற்று மாசு அளவு உயர்ந்ததற்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர். அந்த கட்சி போலியான வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றியதாகவும், காற்று மாசு மற்றும் டெங்கு பரவலை தடுக்க அரசு தவறிவிட்டதாகவும் கம்பீர் குறிப்பிட்டிருந்தார்.


காற்றுமாசு காரணமாக வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு ஊதுபத்தி கொளுத்துவதும் காற்று மாசை ஏற்படுத்தும் என கூறி அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே செல்கிறபோது மாஸ்க்குகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து மத்திய அரசின் காற்று தர கணிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு ‘சபார்’ விடுத்துள்ள அறிக்கையில், “அறை ஜன்னல்களை மூடி விடுங்கள், அடிக்கடி வீட்டை ஈரத்துணியினால் துடைத்துக் கொள்ளுங்கள், விறகு கட்டை, மெழுகுவர்த்தி, ஊதுபத்தியைக் கூட கொளுத்துவதை நிறுத்தி விடுங்கள்” என மக்களுக்கு கூறப்பட்டுள்ளது.


டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கை எடுக்க தவறி வரும் நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் டெல்லியில் மாசு அதிகரிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி சுற்றுசூழல் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையில் டெல்லியில் காற்று மாசு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. கடந்த வருடம் டெல்லியில் காற்று மாசு அபாயகரமான அளவில் அதிகரித்ததால் கட்டுமானப் பணிகளுக்கும் தொழிற்சாலை நடவடிக்கைகளுக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story