Top
undefined
Begin typing your search above and press return to search.

கேரள காவல்துறையினரால் தடியடி நடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிவதாசன் என்ற ஐயப்ப பக்தரின் உடல் காட்டு பகுதியில் கண்டெடுப்பு : கம்யூனிஸ்ட் அரசின் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டாரா?

கேரள காவல்துறையினரால் தடியடி நடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிவதாசன் என்ற ஐயப்ப பக்தரின் உடல் காட்டு பகுதியில் கண்டெடுப்பு : கம்யூனிஸ்ட் அரசின் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டாரா?

SG SuryahBy : SG Suryah

  |  1 Nov 2018 8:32 PM GMT

கேரள மாநிலம் பந்தளம் அருகே உள்ள முலாம்புழாவில் உள்ள சரத் பவனில் வசிப்பவர் சிவதாசன், (வயது 60). தீவிர ஐயப்ப பக்தரான இவர், சபரிமலை ஐயப்பன் சன்னதி நடை எப்பொழுதெல்லாம் திறக்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் சென்று சபரிமலை ஐயப்பனை வழிபட தவறியதில்லை. கடந்த மாதம் துலாம் மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் சன்னதி நடை திறக்கப்பட்ட போது, சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அக்டோபர் 18 ஆம் தேதி தனது வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். பந்தளத்தில் நடந்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான ஐயப்ப நாம ஜப ஊர்வலத்தில் பங்கு பெற்றார். பிறகு, வெகு நாட்கள் ஆயினும் வீடு திரும்பாததால், உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து, நேற்று அவரது உறவினர்களால் கம்பகாத்துன்வளவு காடு பகுதிகளில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்று மனோரமா செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
முன்னதாக, நிலக்களில் ஸ்வாமி ஐயப்பன் நாம ஜப யஞ்னம் நடத்திய ஜெயராஜ் மற்றும் அபிளாஷ் ஆகிய இருவரை பத்தினம்திட்டா காவல்துறையினர் கைது செய்தனர். ரன்னி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இவர்கள் பூஜாப்பூரா சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், இந்த செய்தியை அறியாத இவர்களின் தாயார்கள் இவர்களை தேடி வந்தனர். பிறகு, காவல்துறையால் கைது செய்யப்பட்டது தெரிய வந்தது என்று கேரலாகமுடி
செய்தி
குறிப்பு தெரிவிக்கிறது.
இதே போன்று, சிவதாசனும் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று பா.ஜ.க குற்றம் சாட்டி வந்தது. மேலும் சிவதாசன் காணாமல் போயிருப்பது குறித்து நீதி விசாரணை வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. இந்த நிலையில், மர்மமான முறையில் சிவதாசன் இறந்து கிடந்தது பல கேள்விகளை எழுப்புகிறது.
இதனை தொடர்ந்து, கேரள பா.ஜ.க தலைவர் திரு.ஸ்ரீதரன் பிள்ளை கூறுகையில், "சிவதாசன் அவர்கள் கடந்த 17 ஆம் தேதி முதல் காணவில்லை. தனது இருசக்கர வாகனத்தில் ஸ்வாமி ஐயப்பனின் படத்தை வைத்துக்கொண்டு ஐயப்ப நாம ஜப யஞ்னத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும். இனி கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிவியில் இருக்க கூடாது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும்", என்று கூறியுள்ளார்.
இது குறித்து மாவட்ட காவல்துறை அதிகாரி திரு. டி.நாராயணன் மனோரமா செய்தியிடம் கூறுகையில், "சிவதாசன் என்பவர் காணவில்லை என்று, பந்தளம் காவல்நிலையத்துக்கு அக்டோபர் 25 ஆம் தேதி புகார் வந்தது. அவரது உடல் லஹா என்ற இடத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையால் தடியடி நடத்தப்பட்டது நிலக்களில்", என்று கூறியுள்ளார்.
முன்னதாக அமைதியாக நடந்த சபரிமலை புரட்சியை வன்முறையாக சித்தரிக்க, நின்று கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை, கேரள காவல்துறையினர் அடித்து நொறுக்கினர்.  தற்போது காவல்துறையால் தடியடி நடத்தப்பட்டதாக கூறப்படும் சிவதாசன் என்பவர் மர்ம முறையில் இறந்திருப்பது ஹிந்து விரோத கேரள கம்யூனிஸ்ட் அரசின் தலைமையில் இயங்கும் கேரள காவல்துறையினர் மீதுள்ள சந்தேகத்தையே அதிமாக்குவதாக மக்கள் கருதுகின்றனர்.
Next Story