Top
undefined
Begin typing your search above and press return to search.

திரிசங்கு நிலையை திறமையாக கையாண்ட பிரதமர் - அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர்கொண்ட சாமர்த்தியம்

திரிசங்கு நிலையை திறமையாக கையாண்ட பிரதமர் - அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர்கொண்ட சாமர்த்தியம்

SG SuryahBy : SG Suryah

  |  1 Nov 2018 6:36 PM GMT

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி நிறுத்தினால் ஏற்கனவே உயர்வை சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலை இன்னும் கனவில் கூட நினைத்து பார்த்திராத உச்சத்திற்கு சென்று விடும். அதுவே கச்சா எண்ணெய் வாங்கினால் அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கும். இப்படி முடிவே எடுக்க முடியாத திரிசங்கு நிலையை எதிர்கொண்ட பிரதமர் மோடி, இந்த விவகாரத்தை திறமையாக கையாண்டு உள்ளார். தற்போது ஈரானிடம் இருந்து அளவை குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதை அடுத்து, பொருளாதார தடை விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியா மற்றும் இதர நாடுகளும் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முற்றிலுமாக நவம்பர் 4-ம் தேதிக்குள் நிறுத்த வேண்டும். அல்லது அந்த நாடுகளும் பொருளாதார தடையை சந்திக்க வேண்டியிருக்கும். இதிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அமெரிக்கா எச்சரித்து இருந்தது. இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியில், சவுதி அரேபியா, ஈராக் ஆகிய நாடுகளுக்கு அடுத்து ஈரான் மூன்றாவது இடத்தில் உள்ளது. 2017 ஏப்ரல் மாதத்திலிருந்து ஜனவரி 2018-வரை, 2017-18 நிதியாண்டில் முதல் 10 மாதங்களில் ஈரான் 1.84 கோடி டன் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்த அளவை 30 மில்லியன் டன் ஆக அதிகரிக்க இந்தியா முடிவு செய்திருந்தது. ஆனால் அமெரிக்காவின் உத்தரவால் இதில் இருந்து விலக்கு பெறும் வகையில், இந்தியா தரப்பில் அமெரிக்க அரசு அதிகாரிகள் மட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அமெரிக்கா விலக்கு அளிப்பதற்கான நிபந்தனையாக, இந்தியா, ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் அளவை 14 முதல் 15 டன்களாக குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டில் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவை 35 சதவீதம் அளவுக்கு இந்தியா குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், பொருளாதாரத் தடை விதிப்பில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story