Top
undefined
Begin typing your search above and press return to search.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவித் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் : வேலைவாய்ப்புகள் பல மடங்கு உயரும் என எதிர்பார்ப்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவித் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் : வேலைவாய்ப்புகள் பல மடங்கு உயரும் என எதிர்பார்ப்பு

SG SuryahBy : SG Suryah

  |  1 Nov 2018 6:44 PM GMT

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை புதுதில்லியில் உள்ள விஞ்ஞான்பவனில் நவம்பர் 2, 2018 – வெள்ளியன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைப்பார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜெட்லி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. கிரிராஜ் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் கிடைப்பது சந்தை வசதி உள்ளிட்ட ஆதரவு நடவடிக்கைகள் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான உதவித்திட்டம் நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் 100 நாட்கள் செயல்படுத்தப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு, மத்திய அரசும் நிதி நிறுவனங்களும் பல்வேறு வசதிகள் செய்திருப்பது பற்றியும், இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்வது பற்றியும் எடுத்துரைப்பதற்காக இந்த மாவட்டங்களுக்கு மத்திய அமைச்சர்கள் பலரும் செல்வார்கள் என்று தெரிகிறது.
ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்கின்ற, அதிக அளவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் துறைகளில் ஒன்றான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையை மேலும் ஊக்குவிப்பதற்கு இந்தத் திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source : PIB
Next Story