Top
undefined
Begin typing your search above and press return to search.

59 நிமிடங்களில் 1 கோடி ரூபாய் கடன் - மோடி அதிரடி

59 நிமிடங்களில் 1 கோடி ரூபாய் கடன் - மோடி அதிரடி

SG SuryahBy : SG Suryah

  |  2 Nov 2018 6:07 PM GMT

59 நிமிடங்களில், 1 கோடி ரூபாய் வரை கடன் உதவி வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கபட்டுள்ளது. மேலும், தொழிலாளர் சட்டங்களில் தளர்வு, கம்பெனி சட்டங்களில் மாற்றம் உட்பட பல திட்டங்களை அறிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான கருத்தரங்கில் , "குறு மற்றும் சிறு தொழில் செய்வோரை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு தொழில் கடன் வழங்க, தனி இணையதளம் உருவாக்கப்பட உள்ளது. இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிப்போருக்கு, 59 நிமிடங்களில், 1 கோடி ரூபாய் வரை, கடன் வழங்கப்படும். ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யும் நிறுவனங்கள் வாங்கியுள்ள, 1 கோடி ரூபாய் வரையிலான கடன் தொகை மீதான வட்டியில், 2 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்" என்று பிரதமர் மோடி கூறினார்.
"சிறிய தொழிற்சாலைகள், ஆண்டுக்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்யும்படி, தொழிலாளர் சட்டம் தளர்த்தப்படும். கம்பெனி சட்டத்தின் கீழ், சிறிய குற்றங்களுக்கான அபராத தொகையை குறைக்க, சட்ட திருத்தம் செய்யப்படும்" என்றும் கூறினார். இது சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு வரப்பிரசாதமாக இருக்கும்
Next Story