Top
undefined
Begin typing your search above and press return to search.

போலி ஆவணம், போலி முத்திரை, போலி கையெழுத்து - சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க நிர்வாகி! ரவுடிகளின் கூடாரமா தி.மு.க?

போலி ஆவணம், போலி முத்திரை, போலி கையெழுத்து - சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க நிர்வாகி! ரவுடிகளின் கூடாரமா தி.மு.க?

SG SuryahBy : SG Suryah

  |  3 Nov 2018 2:15 PM GMT

தி.மு.க பிரமுகர் மருதமலை சேனாதிபதி என்பவர் போலி ஆவணங்களைத் தயாரித்து, வீட்டு மனைகளை விற்ற குற்றத்துக்காக, கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தி.மு.க-வின் ஒன்றியச் செயலாளராக கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் மருதமலை சேனாதிபதி. ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் செய்து வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோபிநாத் என்பவர் சேனாதிபதி மற்றும் வீரகேரளத்தைச் சேர்ந்த இருவரிடம் சோமையம்பாளையம் ஊராட்சியில் சுமார் 1 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். அதே பூமியை, வீட்டு மனைகள் கட்டி விற்பதற்காக நேரு நகர் என்ற பெயரில் 23 வீட்டு மனைகளாகப் பிரித்து, அதில் 10 வீட்டு மனைகளை விற்றிருக்கிறார் சேனாதிபதி.
குறிப்பாக, வரன்முறை படுத்தப்படாமல் இருந்ததை, வரன்முறை படுத்தப்பட்டதாக (DTCP) போலி ஆவணங்களைத் தயாரித்து, போலி முத்திரைகளையும் பயன்படுத்தி, அதில் வட்டார வளர்ச்சி அலுவலரின் கையொப்பத்தையும் போலியாக உருவாக்கி, வீடு கட்டி விற்பனை செய்துள்ளார். இ
தையடுத்து, போலி ஆவணங்களைத் தயாரித்து, வீட்டு மனைகளை விற்று மோசடி செய்ததாக சேனாதிபதி மேல் புகார் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் கோவை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் சேனாதிபதியைக் கைது செய்துள்ளனர். அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்டாலின் தி.மு.க தலைவராக பொறுப்பேற்றது முதல் தி.மு.க-வின் வன்முறையும், அட்டூழியங்களும் தமிழகத்தில் தலைவிரித்தாடுவது குறிப்பிடத்தக்கது.
Next Story