Top
undefined
Begin typing your search above and press return to search.

ரூபே கார்ட் விவகாரத்தில் சர்வதேச சதி முறியடிப்பு! மோடி அரசை குறித்து அமெரிக்க அரசாங்கத்திடம் பஞ்சாயத்திற்கு செல்லும் மாஸ்டர் கார்டு நிறுவனம்!

ரூபே கார்ட் விவகாரத்தில் சர்வதேச சதி முறியடிப்பு! மோடி அரசை குறித்து அமெரிக்க அரசாங்கத்திடம் பஞ்சாயத்திற்கு செல்லும் மாஸ்டர் கார்டு நிறுவனம்!

SG SuryahBy : SG Suryah

  |  3 Nov 2018 6:31 AM GMT

இந்திய தேசிய கட்டண நிறுவனத்தின் ரூபே கார்டை பிரதமர் நரேந்திர மோடி பிரபலப்படுத்தி வருவதால், எரிச்சலடைந்திருக்கும் அமெரிக்காவின் மாஸ்டர் கார்டு நிறுவனம், டிரம்ப் அரசிடம் புகார் அளித்துள்ளது.


ரூபே(RuPay) என்பது இந்திய தேசிய கட்டண நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு கட்டண அட்டை திட்டமாகும். இது உருவாக்கப்பட்டதன் நோக்கமானது இந்திய ரிசர்வ் வங்கியின் விருப்பமான உள்நாட்டு, திறந்த நிலை, பன்முக கட்டண அமைப்பை ஏற்படுத்துவதாகும். ரூபே அனைத்து இந்திய வங்கிகளுக்கும், நிதி நிர்வாகங்களுக்கும் மின் வழி நிதி மாற்றம் வசதியை அந்நிய நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர்கார்டுக்கு மாற்றாக அளிக்கிறது. NPCI ஆனது Discover Financial Service என்ற உலகளாவிய அமைப்புடன் உடன்படிக்கை செய்துக் கொண்டு இந்திய வாடிக்கையாளர்களுக்கு உலகளாவிய மின்வழி நிதி மாற்றம் என்ற வசதியை அளிக்கிறது.


முழுமையாக இந்தியாவிலேயே செயல்படுவதால் ரூபே கார்டுகள் விசா, மாஸ்டர் கார்டுகளை விட வேகமாகச் செயல்படுகின்றன. விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் சர்வதேச அளவில் செயல்படுவதால் வேகம் குறைவாக உள்ளது. ரூபே கார்டுகளில் பணப் பரிமாற்ற கட்டணங்கள் உண்டு. ஆனால் விசா, மாஸ்டர் கார்டுகளை விடக் குறைவான கட்டணங்கள் தான் வசூலிக்கப்படுகின்றது. விசா, மாஸ்டர் கார்டுகள் போன்ற சேவை அளிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள். நாம் இங்குச் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் அவர்களுக்குச் சில கட்டணங்களைச் செலுத்து வருகின்றன. அதற்காக நமது வங்கி கணக்குகளில் இருந்தும் அவ்வப்போது கட்டணங்கள் பிடிக்கப்படுகின்றன. இந்தக் கட்டணமாகப் பெறப்படும் வருவாய் அனைத்தும் வெளிநாட்டில் உள்ள இந்த விசா, மாஸ்டர் போன்ற நிறுவனங்களுக்குக் கொண்டு செல்வதைக் குறைக்கவே மத்திய அரசு ரூபே கார்டுகளை அறிமுகப்படுத்தியது.



ரூபே கார்டு முறை, அனைத்து இந்திய வங்கிகளுக்கும், நிதி நிர்வாகங்களுக்கும், மின்வழி நிதி மாற்றம் வசதியை, வெளிநாட்டு நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டுக்கு மாற்றாக அளித்து வருகிறது. தாம் பங்கேற்கும் முக்கிய நிகழ்வுகளில், பொது மக்கள் தேசத்திற்கு சேவையாற்ற விரும்பினால், ரூபேவை பயன்படுத்துங்கள் என பிரதமர் கோரிக்கை விடுத்து, பிரபலப்படுத்தி வருகிறார். இதனால், ரூபேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அமெரிக்காவின் மாஸ்டர் கார்டு நிறுவனம் எரிச்சலடைந்திருக்கிறது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்திருக்கிறது. அதில், தேச நலனை முன்னிறுத்தி, ரூபே கார்டு திட்டத்தை மோடி பிரபலப்படுத்துவதால், தங்களது வர்த்தகம் பாதிக்கப்படுவதாகவும், மாஸ்டர் கார்டு நிறுவனம் அமெரிக்க அரசிடம் கூறியிருக்கிறது.
Next Story