Kathir News
Begin typing your search above and press return to search.

கோவில்களுக்கு  சொந்தமான குத்தகை விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Nov 2018 7:26 PM GMT

கோவில்களுக்கு சொந்தமான குத்தகை விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்புகளூர், வேலக்குறிச்சி ஆதீனத்திற்குச் சொந்தமான பன்னிரண்டரை ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி திரு எஸ்.எம் சுப்பிரமணியம், கோவில் நிலங்களை ஆக்கிரமித்து சிலர் தவறாகப் பயன்படுத்தி வருவதை அறநிலையத் துறை கண்டும், காணாமலும் இருப்பது வேதனை அளிப்பதாகக் கூறினார். கோவில் நிலங்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள், கடமை தவறிவிட்டதாகக் கூறிய நீதிபதி, இனிமேலாவது ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டறிந்து மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.
Source : AIR News
Next Story
கதிர் தொகுப்பு
Trending News