Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியா அமெரிக்கா உடனான வர்த்தக பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் உரையாடல்

இந்தியா அமெரிக்கா உடனான வர்த்தக பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் உரையாடல்

SG SuryahBy : SG Suryah

  |  3 Nov 2018 5:50 PM GMT

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் தொடர்பு கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பிரச்னைகள் குறித்து பேச்சு நடத்தி இருப்பதாக அதிபர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா, அமெரிக்காவின் மதிப்புமிக்க கூட்டாளி என்றும், இருநாடுகளும் பேச்சுக்கள் நடத்தி வருவதாகவும் அதிபர் மாளிகை முதன்மைப் பொருளாதார ஆலோசகர் திரு லேர்ரி குட்லோ  தெரிவித்தார். எனினும், இந்த இரு தலைவர்களும் எப்போது பேசினார்கள் என்பது பற்றி அவர் தெளிவுபடுத்தவில்லை. இரு தரப்பு வர்த்தகம் தொடர்பான சில பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வர்த்த்க ஒப்பந்தம் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் கருத்துப் பரிமாற்றம் செய்துள்ளதாக மத்திய வர்த்தகத்  தொழில்துறை அமைச்சர் திரு சுரேஷ் பிரபு சென்ற சனிக்கிழமை புதுதில்லியில் தெரிவித்திருந்தார். எஃகு, மற்றும் அலுமினியம் உற்பத்திப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள அதிக வரியை விலக்கிக் கொள்வது, சில உள்நாட்டுப் பொருட்களுக்கு அளிக்கப்பட்ட ஏற்றுமதிப் பயன்களை மீண்டும் தொடருவது, விவசாயம், மோட்டார் வாகனம் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் தனது உற்பத்திப் பொருட்களுக்கு கூடுதல் சந்தை வசதி போன்றவற்றுக்காக இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா தரப்பிலிருந்து, அந்நாட்டின் விவசாயப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள், மருத்துவக் கருவிகள் ஆகியவற்றுக்கு மேலும் அதிக அளவு சந்தை வசதி தேவை என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
Source : AIR News
Next Story