Top
undefined
Begin typing your search above and press return to search.

துவங்கியது இந்தியாவின் முதல் கொள்கலன் கப்பல் போக்குவரத்து : 16 கண்டெய்னர்களை சுமந்து கங்கை நதியில் செல்கிறது ரபிந்த்ரநாத் தாகூர் - மோடி அரசின் சரித்திர சாதனை

துவங்கியது இந்தியாவின் முதல் கொள்கலன் கப்பல் போக்குவரத்து : 16 கண்டெய்னர்களை சுமந்து கங்கை நதியில் செல்கிறது  ரபிந்த்ரநாத் தாகூர் - மோடி அரசின் சரித்திர சாதனை

SG SuryahBy : SG Suryah

  |  3 Nov 2018 1:21 PM GMT

இந்தியாவின் முதல் கொள்கலன் கப்பல், ரபிந்த்ரநாத் தாகூரின்  போக்குவரத்து புனித கங்கை நதியில் துவங்கியது. கொல்கத்தா முதல் வாரணாசி வரை உள்ள நேஷனல் வாட்டர்வேஸ் 1-இல் பயணிக்கும் இந்த கொள்கலன் கப்பல், 16 கண்டெய்னர்களை சுமந்து செல்கிறது. இந்த கப்பல், 9 அல்லது 10 நாட்களில் வாரணாசி சென்று அடையும். பிறகு, விவசாயத்திற்கு தேவையான உரங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் அலகாபாத் சென்று அடையும். IWAI-வின் குறிப்புகள் படி, இந்த நீர்வழி போக்குவரத்து, கார்பன் தடத்தை குறைக்க உதவும் என்றும், போக்குவரத்து செலவை மிக பெரிய அளவில் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவிக்கையில், "இந்தியா சுதந்திரம் பெற்று முதல் முறையாக உள்நாட்டு கப்பல்,  கண்டெய்னர்களை சுமந்து செல்கிறது. 16 கண்டெய்னர்களை சுமந்து கொண்டு எம்.வி.ஆர்.என் தாகூர் கப்பல், கங்கை நதி மீது, கொல்கத்தா முதல் வாரணாசி வரை செல்கிறது. இது மிக பெரிய சாதனை", என்று தெரிவித்துள்ளார்.
https://twitter.com/nitin_gadkari/status/1058590268218208256?s=19
மேலும், நவம்பர் 12 ஆம் தேதி வாரணாசியில் பிரதமர் மோடி இந்த கப்பலை வரவேற்பார் என்று உறுதிப்படுத்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள வாரணாசி கப்பல் முனையத்தை நாட்டுக்கு அர்பணிப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/nitin_gadkari/status/1058592388862472193?s=19
இந்தியாவின் போக்குவரத்து முன்னேற்றங்களில் இது சரித்திர சாதனையாகும். கண்டெய்னர்களை தாங்கி செல்லும் உள்நாட்டு கப்பல் போக்குவரத்து மூலம், தொழில் புரிவோர்களின் போக்குவரத்து செலவுகள் பாதியாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story