Top
undefined
Begin typing your search above and press return to search.

வாயில் சுருட்டுடன் விஜய் தோன்றும் தடை செய்யப்பட்ட புகைப்படமே ரசிகர்கள் வைக்கும் பேனர்கள், போஸ்டர்களில் நிரம்பியுள்ளன : அநாகரீகத்தை இரசிகர்களுக்கு ஊற்றி வளர்க்கிறாரா விஜய் ?

வாயில் சுருட்டுடன் விஜய் தோன்றும் தடை செய்யப்பட்ட புகைப்படமே ரசிகர்கள் வைக்கும் பேனர்கள், போஸ்டர்களில் நிரம்பியுள்ளன : அநாகரீகத்தை இரசிகர்களுக்கு ஊற்றி வளர்க்கிறாரா விஜய் ?

SG SuryahBy : SG Suryah

  |  2 Nov 2018 6:47 PM GMT






தீபாவளிக்கு விஜய் நடித்த சர்கார் படம் வெளியாக உள்ள நிலையில் வாயில் சுருட்டுடன் விஜய் தோன்றும் தடை செய்யப்பட்ட புகைப்படமே ரசிகர்கள் வைக்கும் பேனர்கள், போஸ்டர்களில் நிரம்பியுள்ளன. தடை செய்யப்பட்ட விஜய்யின் புகைப்படம் தமிழகம் முழுவதும் பேனர்களாவும், கட் அவுட்டுகளாகவும் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதே புகைப்படத்தைப் பயன்படுத்துவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
இது குறித்து கருத்து தெரிவிதுள்ள சமூக ஆர்வலர் ஒருவர், சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம். நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்யத் தீர்மானித்திருக்கிறோம். அப்போது இந்த ஆதாரங்களை எல்லாம் சமர்ப்பிப்போம். சட்டத்துக்குப் புறம்பான புகையிலை விளம்பரங்களைக் கண்காணிக்கும் மத்திய, மாநில கமிட்டிகளுக்கும் புகார் அனுப்பியிருக்கிறோம்.



ரசிகர் மன்றங்கள் விஜய்யின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. தடை செய்யப்பட்ட புகைப்படத்தைப் பயன்படுத்தி, பேனர்கள் வைப்பதற்கு விஜய் ஆட்சேபம் தெரிவிக்காததால், அதை ஆதரிக்கிறார் என்றுதான் அர்த்தம். ரசிகர்களைப் பயன்படுத்தி இந்த விளம்பரத்தை விஜய் செய்துவருகிறார். புகைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் இதுபோன்ற தீய செயல்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு விஜய் சட்டப்படி பதில் சொல்லியே ஆகவேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.







Next Story