Top
undefined
Begin typing your search above and press return to search.

வாட்ஸாப் வதந்தியால் மாயும் உயிர்கள் : வாட்ஸாப் தொழில் நுட்பத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு வலியுறுத்தியது

வாட்ஸாப் வதந்தியால் மாயும் உயிர்கள் : வாட்ஸாப் தொழில் நுட்பத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு வலியுறுத்தியது

SG SuryahBy : SG Suryah

  |  2 Nov 2018 6:30 PM GMT

முன்னதாக வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் குழந்தை கடத்தல் வதந்தியால் நாடு முழுவதும் பலர் அடித்துக் கொல்லப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வாட்ஸ் அப்பில் பகிரப்படும் சர்ச்சையான கருத்துகளைத் தடுக்க வேண்டும் மற்றும் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு சார்பில் சில மாதங்களுக்கு முன்னதாகக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.



இதனையடுத்து கடந்த ஆகஸ்டில்  வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் டேனியல்ஸ், மத்திய தகவல் தொழில்நுட்ப அதிகாரியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, வாட்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும் குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ்அப் சிஇஒ விடம் வலியுறுத்தி இருந்தார்.



இந்நிலையில் தற்போது அமெரிக்காவிலிருந்து, இந்தியா வந்துள்ள, வாட்ஸ் - ஆப் நிறுவனத்தின் துணை தலைவர், கிறிஸ் டேனியல்ஸ், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், தவறான தகவல்கள் மூலம் ஏற்பட்ட பிரச்னைகளை பற்றி, அந்நிறுவனத்தின் துணை தலைவர் கிறிஸ் டேனியல்ஸ் மற்றும் அவரது குழுவினருடன் விவாதித்தேன். இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு என, தனியாக குறைதீர் அதிகாரியை நியமிக்க இருப்பதாக தெரிவித்தனர்.  தவறான தகவல்களை பரப்புவோரின் அடையாளம் மற்றும் இருப்பிடம் குறித்த தகவல்களை, அரசுக்கு தெரிவிக்கும்படியும் வலியுறுத்தினேன். இது குறித்து, தங்கள் தொழில்நுட்ப குழுவுடன் ஆலோசித்து, பின், பதில் அளிப்பதாக, அவர் தெரிவித்தார்’ என குறிப்பிட்டுள்ளார்.

Next Story