Top
undefined
Begin typing your search above and press return to search.

இஸ்லாமியர்களின் சம்மதத்துடன் அயோத்தியில் கட்டபடுகிறதா ராமர் கோயில் ? டிசம்பர் 6ஆம் தேதி அடிக்கல் நாட்டப்படுகிறாதா ?

இஸ்லாமியர்களின் சம்மதத்துடன் அயோத்தியில் கட்டபடுகிறதா ராமர் கோயில் ? டிசம்பர் 6ஆம் தேதி அடிக்கல் நாட்டப்படுகிறாதா ?

SG SuryahBy : SG Suryah

  |  4 Nov 2018 11:43 AM GMT

வரும் டிசம்பர் 6-ல் ராமர் கோயில் கட்டும் பணி அயோத்தியில் துவக்க இருப்பதாக ராம்விலாஸ் வேதாந்தி நேற்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார். மேலும் அவர் இது குறித்து தெரிவிக்கையில், அயோத்தியில் ராமர் கோயில் அமைக்கும் பணியானது இசுலாமியர்களின் சம்மதத்துடன் நடைபெறும் எனக் கூறியுள்ளதால் மக்களிடையே குழப்பம் உருவாகி  உள்ளது.
கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 -ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அயோத்தியில் இதன் மீதான வழக்கு கடந்த 1950 -ல் இருந்து நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது. இதன் மேல்முறையீட்டு மனு, தற்போது வெறும் நிலப்பிரச்சனையாக உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி முதல் அன்றாடம் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கு  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பாஜக தலைவர்கள் மற்றும் அதன் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக், உட்பட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளும், சாதுக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்த ஆலோசனை செய்ய நேற்று டெல்லியின் டால்கட்டோரா அரங்கில் அகில இந்திய சாதுக்கள் சபையின்(அகில பாரதிய சந்த் சமிதி) கூட்டம் கூடியுள்ளது. இதில், கலந்து கொண்ட முக்கிய சாதுவும், பாஜகவின் முன்னாள் எம்பியுமான ராம்விலாஸ் வேதாந்தி,  அடுத்த மாதம் டிசம்பரில் ராமர் கோயில் கட்டும் பணிகள் முஸ்லிம்களின் சம்மதத்துடன் துவக்கப்படும் எனவும், இசுலாமியர்களின் பாபர் மசூதி லக்னோவில் கட்டப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். மேலும், அடுத்து வரும் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக கோயில் கட்டி முடிக்கப்படும் என்று அதிரடியாக ராம்விலாஸ் வேதாந்தி தெரிவித்தார். இவருடைய இந்த கருத்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
Inputs and Credits : Seithipunal
Next Story