Top
undefined
Begin typing your search above and press return to search.

சி.பி.ஐ-யில் சிக்கியுள்ள கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு தப்பி செல்லும் முயற்சி தடுக்கப்பட்டது

சி.பி.ஐ-யில் சிக்கியுள்ள கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு தப்பி செல்லும் முயற்சி தடுக்கப்பட்டது

SG SuryahBy : SG Suryah

  |  4 Nov 2018 10:12 AM GMT





காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல் மேக்சிஸ்மற்றும் ஐ.என்.எக்ஸ் மீடியா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை நிறுவனங்கள் பதிவு செய்துள்ள இந்த வழக்குகளில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.



2006ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடுக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இதற்கு ப. சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. நிதி நிறுவன முறைகேட்டில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குத் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளன என்று சட்டவிரோத பணப்பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது.
இந்த விவகாரத்தை அமலாக்கத்துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித்துவருகின்றன. டெல்லியில் உள்ள பட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் வழக்கு நடக்கிறது. இந்த விவகாரத்தில் இன்னும் உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில், இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.



அக்டோபர் 8ம் தேதி மீண்டும் மனு விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, வழக்கு விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம். அதுவரை சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் தடை நீடிப்பு செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ப.சிதம்பரத்தின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான அமலாக்கத்துறை, ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் எந்தவித ஒத்துழைப்பையும் தர மறுப்பதாக அமலாக்கத்துறை சார்பில் குற்றம் சாட்டப்பட்டதோடு, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது.



ஆனால் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்க மறுத்த, பட்டியாலா நீதிமன்றம், நவம்பர் 26ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. அதுவரை, சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில் தான் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் யு.யு.லலித், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வது அவ்வளவு முக்கியமில்லை எனக்கூறிய நீதிபதிகள், எனவே ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு பின்னரே இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.






Next Story