Top
undefined
Begin typing your search above and press return to search.

சபரிமலை ஸ்வாமி ஐயப்பன், கடவுளே இல்லை : ஐயப்ப பக்தர்கள் மனதை புண்படுத்தி ஹிந்து மத வெறுப்பை கக்கும் பிரகாஷ் ராஜ்

சபரிமலை ஸ்வாமி ஐயப்பன், கடவுளே இல்லை : ஐயப்ப பக்தர்கள் மனதை புண்படுத்தி ஹிந்து மத வெறுப்பை கக்கும் பிரகாஷ் ராஜ்

SG SuryahBy : SG Suryah

  |  4 Nov 2018 1:10 PM GMT

சபரிமலை ஸ்வாமி ஐயப்பன் கும்பிட வேண்டிய கடவுள் இல்லை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாக மலையாள செய்தியான மாத்ருபூமி செய்தி வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள பிரகாஷ்ராஜ், தாய்மார்களை சன்னதிக்குள் அனுமதிப்பதில்லை என்ற பொய் கூற்றை கூறி இவ்வாறு மத வெறுப்பு பேச்சை பேசியுள்ளார். சபரிமலை ஐயப்பன் சன்னதியில் மட்டும் தான் குறிப்பிட்ட வயது பெண்களை அனுமதிப்பதில்லை என்ற உண்மையை மறைத்து இவ்வாறு ஸ்வாமி ஐயப்பன் மீது வெறுப்பை விதைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
அதோடு நிறுத்தாமல் ஒட்டு மொத்த ஹிந்து மதத்தின் மீதும் வெறுப்பை விதைத்துள்ளதாக கருதப்படுகிறது. இந்த பேச்சு, ஐயப்ப பக்தர்களை காயப்படுத்தியது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ஹிந்து மதத்தினரையும் கொதிப்படைய செய்துள்ளது. இந்த பேச்சுக்கு பிரகாஷ்ராஜ் பகிரங்க மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
https://youtu.be/KxNokhX6gUA
Next Story