Top
undefined
Begin typing your search above and press return to search.

ரயிலில் பொதுப்பெட்டிகளில் பயணம் செய்வதற்கு முன்பதிவில்லா பயணச் சீட்டுகளை செல்போன் செயலி மூலம் பதிவு செய்துகொள்வதற்கான வசதி நடைமுறைக்கு வந்தது : பயணிகள் மகிழ்ச்சி

ரயிலில் பொதுப்பெட்டிகளில் பயணம் செய்வதற்கு முன்பதிவில்லா பயணச் சீட்டுகளை செல்போன் செயலி மூலம் பதிவு செய்துகொள்வதற்கான வசதி நடைமுறைக்கு வந்தது : பயணிகள் மகிழ்ச்சி

SG SuryahBy : SG Suryah

  |  3 Nov 2018 8:45 PM GMT

ரயிலில் பொதுப்பெட்டிகளில் பயணம் செய்வதற்கு முன்பதிவில்லா பயணச் சீட்டுகளை செல்போனில் இருந்தே ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்வதற்கான வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. ரயில் சேவையை அதிகளவில் பயன் படுத்துவோர் யு.டி.எஸ் எனப்படும் செல்போன் செயலியில் தங்களது பெயரைப் பதிவு செய்துகொண்டு தேவைப்படும்போது முன்பதிவில்லா பயணச் சீட்டுகளை பதிவு செய்துகொள்ள முடியும்.
இந்நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் செல்போன் செயலி மூலமாக முன்பதிவில்லா டிக்கெட்களை பெறுவதற்கான வசதியை ரயில்வே துறை அறிமுகம் செய்வதாக கடந்த மாத இறுதியில் அறிவித்தது. இதுபோல், நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்பும் பயணிகளும் இந்த மொபைல் ஆப் வசதியை பயன் படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தது. இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் பொதுபெட்டிகளில் பயணம் செய்யும் மக்கள், நீண்ட நேரம் டிக்கெட் கவுண்டரில் நிற்க வேண்டிய கட்டாயம் இல்லை. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Inputs from AIR and Dinakaran
Next Story