Top
undefined
Begin typing your search above and press return to search.

அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சி பற்றி நல்ல முடிவை தீபாவளி அன்று யோகி அறிவிப்பாரா ?: ஹிந்துக்கள் ஆவல்

அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சி பற்றி நல்ல முடிவை தீபாவளி அன்று யோகி அறிவிப்பாரா ?: ஹிந்துக்கள் ஆவல்

SG SuryahBy : SG Suryah

  |  3 Nov 2018 8:59 PM GMT

உத்தர பிரதேச முதல்வர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்கள், தீபாவளியன்று, அயோத்திக்கு சென்று, சரயு நதியில் நீராடி, ராமபிரானை வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டும் தீபாவளியன்று, அயோத்திக்கு, யோகி ஆதித்யநாத் செல்கிறார். அயோத்தி வழக்கை உடனே விசாரிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்தது பற்றி யோகி கூறுகையில், 'தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும்' என்றார். இந்நிலையில், அம்மாநில, பா.ஜ.க தலைவர் மகேந்திர நாத் பாண்டே கூறுகையில், "அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான நல்ல தகவலை, தீபாவளியன்று முதல்வர் அறிவிப்பார். அங்கு, ராமாயணம் தொடர்பான அருங்காட்சியகம், சிற்ப மற்றும் ஓவிய கூடங்களை, முதல்வர் துவக்கி வைக்கிறார். அத்துடன், ₹330 கோடி செலவில், சரயு நதிக்கரையில், 118 அடி உயர பீடத்தில், 328 அடி உயர, ராமர் சிலை அமைப்பது பற்றியும், முதல்வர் அறிவிப்பார்", என்று அவர் கூறினார்.
இந்நிலையில் அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சி பற்றி நல்ல முடிவை யோகி அறிவிப்பாரா என்று நாட்டில் உள்ள அனைத்து ஹிந்துக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Inputs from Dinamalar
Next Story