Top
undefined
Begin typing your search above and press return to search.

சர்வதேச அரசியலால் இந்தியாவிற்கு நேர இருந்த பொருளாதார நெருக்கடி மத்திய அரசின் முயற்சியால் தடுக்கப்பட்டது

சர்வதேச அரசியலால் இந்தியாவிற்கு நேர இருந்த பொருளாதார நெருக்கடி மத்திய அரசின் முயற்சியால் தடுக்கப்பட்டது

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  5 Nov 2018 2:46 PM GMT

ஈரானில் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதித்ததற்குப் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளே காரணம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.


ஈரான் நாட்டில் எண்ணெய் தொடர்பான வர்த்தகம் மற்றும் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா கூறியிருந்தது. ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் ஆறாம் நாளுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, தென்கொரியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு ஈரானில் இருந்து எண்ணெய்ப் பொருட்கள் வாங்க தடை ஏதும் இல்லை என்று கூறியுள்ளது. இந்த எட்டு நாடுகளில் நான்கு நாடுகளின் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வருகின்ற இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் நலன்களைப் புறக்கணித்து விட முடியாது எனப் பிரதமர் மோடி அமெரிக்காவுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், அதற்கு இணங்கி அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


இறக்குமதி செய்யும் எண்ணெய்க்கான விலையை 45 விழுக்காடு ரூபாயாகவும், 55 விழுக்காடு யூரோவாகவும் பெற்றுக்கொள்வது என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. இப்போது முழுவதும் இந்திய ரூபாயாகவே பெற்றுக்கொள்வதாக ஈரான் அறிவித்துள்ளது. அந்தப் பணத்தை எந்த வங்கி வழியாக எப்படிச் செலுத்துவது என்பது குறித்து ஈரானும் இந்தியாவும் பரிசீலித்து வருகின்றன.கச்சா எண்ணெய்க்கான விலையாக ஈரான் பெறும் ரூபாயை இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளும்.

Next Story