Top
undefined
Begin typing your search above and press return to search.

நாடாளுமன்ற தேர்தலுக்காக ராகுல் ஆடும் நயவஞ்சக நாடகம் ; அம்பலப்படுத்திய ரிலையன்ஸ்

நாடாளுமன்ற தேர்தலுக்காக ராகுல் ஆடும் நயவஞ்சக நாடகம் ; அம்பலப்படுத்திய ரிலையன்ஸ்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  5 Nov 2018 5:32 AM GMT

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, ரஃபேல் ஒப்பந்தம் என்பதே மோடிக்கும் அனில் அம்பானிக்கும் இடையிலான கூட்டு எனக் குற்றம்சாட்டினார். டசால்ட் நிறுவனம் கொடுத்த பணத்தில்தான் கூட்டுத்தொழிற்சாலைக்கான நிலத்தை அனில் அம்பானி வாங்கியுள்ளார் என்றும், நட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு டசால்ட் ₹284 கோடியை வழங்கியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். டசால்ட் நிறுவனத்தால் அனில் அம்பானிக்கு கொடுக்கப்பட்ட முதல் தவணை கமிஷன் இது என்றும் அனில் அம்பானிக்காக தனிப்பட்ட முறையில் தலையிட்டு ஒப்பந்தம் பேசியவர் மோடிதான் என்றும், ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிறகுதான், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் அவர் புகார் கூறினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவரங்களை திரித்து, அப்பட்டமான பொய்களை காங்கிரஸ் கட்சி கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ரிலையன்ஸ் குரூப் மற்றும் அதன் தலைவர் அனில் அம்பானிக்கு எதிரான பொய்ப்பிரச்சாரம் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. வரும் மாநில மற்றும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களை மனதில் கொண்டு, அரசியல் ஆதாயம் அடையும் நோக்கத்துடன் அனில் அம்பானியும், ரிலையன்சும் அரசியல்
சண்டைக்குள் இழுக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் புகார் கூறியுள்ளது. அனில் அம்பானி ₹30 ஆயிரம் கோடி  மதிப்புள்ள ஒப்பந்தத்தைப் பெற்றிருப்பதாக காங்கிரஸ் கூறுவது, அரசியல் ஆதாயத்திற்காக பொதுமக்களை திசைதிருப்பும் நோக்கம் கொண்டது எனவும் ரிலையன்ஸ் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
டஸால்ட் நிறுவன தலைமை அதிகாரி எரிக் டிராப்பியார் economics times க்கு அளித்த பேட்டியில்.,அம்பானி குடும்பம் மரியாதையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதனாலே டஸால்ட் நிறுவனம் அவர்களுடம் ஒப்பந்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.
Next Story