Top
undefined
Begin typing your search above and press return to search.

சரயு நதிக்கரையில் எழுந்தருளுகிறாரா ராமபிரான் ? யோகி அரசின் அடுத்த அதிரடி

சரயு நதிக்கரையில் எழுந்தருளுகிறாரா ராமபிரான் ? யோகி அரசின் அடுத்த அதிரடி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  5 Nov 2018 5:24 AM GMT

இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு, குஜராத்தில் நர்மதை ஆற்றின் நடுவே உள்ள தீவில், சுமார்3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 597 அடி உயரத்தில் பிரமாண்டமாக சிலை அமைக்கப்பட்டுள்ளதை அடுத்து, உத்தரப்பிரதேசத்தில் சரயு நதிக்கரையில், 100 மீட்டர் உயரத்திற்கு ராமர்சிலை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


படேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, குஜராத் சுற்றுலாத் துறை அமைச்சர் கண்பத்சிங் வத்சவா மற்றும் அதிகாரிகள் அழைப்பிதழ் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது சரயு நதிக்கரையில் ₹330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெண்கலத்தில் சிலை அமைக்கப்பட உள்ளதாகவும், சிலைக்கான பீடத்தை 36 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த விவரங்கள் எதையும் உத்தரப்பிரதேச அரசு வெளியிடவில்லை என்றாலும், ராமர் சிலை அமைப்பது குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்த அறிவிப்பை தீபாவளி அன்று வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.

Next Story