Top
undefined
Begin typing your search above and press return to search.

வெகுவிரைவில் இந்திய கடற்படை கப்பல்கள் பெண் மாலுமிகளுடன் இயங்கும் : நிர்மலா சீதாராமன் அதிரடி

வெகுவிரைவில் இந்திய கடற்படை கப்பல்கள் பெண் மாலுமிகளுடன் இயங்கும் : நிர்மலா சீதாராமன் அதிரடி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  4 Nov 2018 7:50 PM GMT

கடற்படையில் மாலுமி பணியில் மகளிரை ஈடுபடுத்த வேண்டுமென பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் நடைபெற்ற கடற்படை அதிகாரிகளின் மூன்று நாள் கருத்தரங்கத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் பாதுகாப்பில் கடற்படை தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றார். கடற்படை கப்பல்களில் மாலுமிகளாக மகளிரும் பணியாற்றும் சூழலை உருவாக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.


இதன் பின்னர் பேசிய கடற்படை தளபதி சுனில் லம்பா, மகளிரை மாலுமி பணியில் ஈடுபடுத்துவது கருத்தரங்கின் ஒரு அம்சமாகும் என்றார். வெகுவிரைவில் இந்திய கடற்படை கப்பல்கள் பெண் மாலுமிகளுடன் இயங்கும் என்று அவர் குறிப்பிட்டார். கப்பற்படையில் இயங்கி வரும் விமான பிரிவில் 238 விமானங்கள் வரை உள்ளன. அவற்றில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் குறுகிய தூர மற்றும் தொலை தூர கடல் ரோந்து பணியில் ஈடுபடும் விமானங்களும் உள்ளன. இந்திய கடற்படையில், இரண்டு பல் மருத்துவர்கள், 148 மருத்துவர்கள் உள்பட 639 மகளிர் பணியாற்றுகின்றனர்.


அடுத்த 10 ஆண்டுகளில் கப்பற்படையின் விமான பிரிவில் விமானங்கள் எண்ணிக்கையை 500 வரையில் கூட்டுவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.  அதில், வெவ்வேறு வகையான விமானங்கள் இருக்கும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவர், அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின்படி, 34 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் பணி இந்திய கப்பல் கட்டும் தளத்தில் நடந்து வருவதாகவும் கூறியிருந்தார்.

Next Story