Top
undefined
Begin typing your search above and press return to search.

தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததால் ஆறு பேர் கைது, 108 பேர் மீது வழக்கு பதிவு : ஹிந்துக்களின் அடிப்படை மத உரிமை மறுக்கப்படுகிறதா ?

தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததால் ஆறு பேர் கைது, 108 பேர் மீது வழக்கு பதிவு : ஹிந்துக்களின் அடிப்படை மத உரிமை மறுக்கப்படுகிறதா ?

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  6 Nov 2018 2:04 PM GMT

காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான நடவடிக்கையாக தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து இம்தியாவின் பெரும்பான்மை மக்களான ஹிந்துக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆலாயினர். காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் வெடி வெடிக்கலாம் என தமிழக அரசு நேரத்தை நிர்ணயித்து இருந்தது.
இந்த நேரத்தில் அல்லாமல் மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியைச் சேர்ந்த 6 பேர் அனுமதிக்கப்படாத நேரத்தில் வெடி வெடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தி இந்து
செய்தி குறிப்பு
தெரிவிக்கிறது.
இதேபோல், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் அனுமதிக்கப்படாத நேரத்தில் வெடிவெடித்ததாக 78 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மொத்தம் 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொலைக்காட்சிச் செய்திகள் தெரிவிக்கின்றன என்று அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இதனை அடுத்து, தீபாவளி அன்று கூட ஹிந்துக்களின் அடிப்படை மத உரிமை மறுக்கப்படுவதாக ஹிந்துக்கள் கருதுகின்றனர்.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின் போது, நள்ளிரவிலும் கூட பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, வயதானவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் தூக்கம் துளைத்து அவதிக்குள்ளாவது வழக்கம். அப்போதும் காற்று மாசு ஏற்படுகிறது. அதனையெல்லாம் ஹிந்துக்கள் சகித்து கொள்கின்றனர். ஆனால் ஹிந்து பண்டிகைளுக்கு மட்டும் இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பட்டாசு வெடிப்பதற்கெல்லாம் கைது மற்றும் வழக்கு பதிவுகள் நடைபெறுவதை தொடர்ந்து, இந்தியாவில் ஹிந்துக்களின் அடிப்படை மத உரிமை மறுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Next Story