Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரதமரை தெய்வமாக வழிபடும் வியாபாரி : மத்திய அரசின் திட்டங்களால் விளைந்த நன்மை

பிரதமரை தெய்வமாக வழிபடும் வியாபாரி : மத்திய அரசின் திட்டங்களால் விளைந்த நன்மை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  5 Nov 2018 7:21 PM GMT

எதிர் கட்சிகள் தோண்டித்துளாவி பார்த்தும் ஒரு மந்திரி மீது கூட ஒரு ஊழல் குற்றச்சாட்டை சுமத்த முடியவில்லை. அந்த அளவிற்கு வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி நடக்கிறது. ஊழலைத் தடுக்கும் முதல் காரியமாக மக்கள் பணம் மக்கள் கையில் நேரடியாகச் சேர்க்க, 0 பேலன்ஸ் ‘‘ஜன்தன்’’ வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. 28 கோடி வங்கிகளையே பார்க்காத ஏழைகள் கணக்கு துவக்கி உள்ளனர். இதன் மூலம் ₹65,000 கோடி சேமிப்பில் வைத்துள்ளனர். கிராம சுகாதாரத்தை மேம்படுத்த, திறந்த வெளியில் கழிப்பதை தடுக்க 3.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 1.5 கோடி கழிப்பறைகள்  கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கிராமப் புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு கட்டிக் கொடுக்க ₹1,78,000 கோடி ஒதுக்கப்பட்டு இதுவரை 50 லட்சம் வீடுகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளது. காஸ் மான்யம், பென்ஷன், 100 நாள் வேலை திட்டக்கூலி, மகப்பேது உதவி, வறட்சி நிவாரணம், திருமண உதவி, உர மான்யங்கள் ஆகியவை இடைத்தரகர் இன்றி நேரடியாக செலுத்தப்படுகிறது. பா.ஜ.க ஆட்சியில் இது போன்ற பல எண்ணற்ற திட்டங்களையும் சாதனைகளையும் கூறிக்கொண்டே போகலாம். அவ்வாறே இது போன்ற ஒரு திட்டத்தால் பயனடைந்த நகைக் கடை உரிமையாளர் ஒருவர், பிரதமர் மோடியின் உருவம் பொறித்த நகைகளை விற்பனைக்கு வைத்தது மட்டுமின்றி,   பூஜை அறையில் வைத்து பூஜிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். சூரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் தாண்டியா திருவிழாவை முன்னிட்டு 5 கிராம் முதல் ஒரு கிலோ வரை தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், நகைக்கட்டிகளில் பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் உருவங்களைப் பொறித்து விற்பனைக்கு வைத்துள்ளார். இது குறித்து நகைக்கடை உரிமையாளர் கூறும்போது, மோடியின் உருவம் பொறித்த நாணயத்தை பலரும் முன்பதிவு செய்து வாங்கிச் செல்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மோடி தங்களுக்கு கடவுள் போன்றவர் என்று குறிப்பிட்ட நகைக் கடை உரிமையாளர், இந்த நகைகளை பூஜை அறையில் வைத்து பூஜிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

Next Story