Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க-வின் கடும் உழைப்பை மூடி மறைக்க ஆம் ஆத்மி செய்த சதி வேலை.!

பா.ஜ.க-வின் கடும் உழைப்பை மூடி மறைக்க ஆம் ஆத்மி செய்த சதி வேலை.!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  5 Nov 2018 7:27 PM GMT

டெல்லியில் யமுனை ஆற்றின் நடுவே சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சிக்னேச்சர் பாலம் நேற்று திறக்கப்பட்டுள்ளது. 154 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் நின்று நகரத்தின் அழகை பறவை பார்வையில் ரசிக்க முடியும். இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்றது.



அப்போது அங்கு சென்ற டெல்லி பா.ஜ.க எம்பியும், மாநில தலைவருமான மனோஜ் திவாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கைகலப்பு ஏற்பட்டது. இந்தப் பாலம் அமைந்துள்ள வடகிழக்கு டெல்லி தொகுதி எம்.பி.யான பா.ஜ.க.வின் மனோஜ் திவாரிக்கு டெல்லி அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை என ஏற்கனவே சர்ச்சை எழுந்தது.



இந்நிலையில், பாலம் திறப்பு விழாவின்போது, அவரது ஆதரவாளர்களுக்கும், ஆம் ஆத்மி கட்சியினருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மேடையில் நின்றிருந்த திவாரியை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ  அமனதுல்லாகான் தள்ளி விட்ட சம்பவமும் அரங்கேறியது.
தமது மக்களவை தொகுதியில் தமது முயற்சியால் சிக்னேச்சர் பாலம் கட்டப்பட்டதாக மனோஜ் திவாரி கூறினார். மேலும், பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த இந்த பாலத்தை புதுப்பிக்க நான்தான் பெருமுயற்சி எடுத்தேன் எனவும் அவர் தெரிவித்தார். பா.ஜ.க-வின் முயற்சியால் காட்டப்பட்ட பாலத்தை ஆம் ஆத்மி கட்சியினர் வெறித்தனமாக சொந்தம் கொண்டாடி அராஜக செயல்களில் ஈடுபடுவது அப்பகுதி மக்களிடத்தில் வெறுப்பை உண்டாக்கி உள்ளது.

Next Story