Top
undefined
Begin typing your search above and press return to search.

பயிசாபாத் என்ற மாவட்டத்தின் பெயர் ஸ்ரீ அயோத்தியா மாவட்டம் என பெயர் மாற்றம், அயோத்யாவில் வருகிறது புதிய மருத்துவக்கல்லூரி மற்றும் விமான நிலையம் : தீபாவளி திருநாளில் அயோத்யாவில் அறிவிப்பை வெளியிட்டார் யோகி ஆதித்யநாத்

பயிசாபாத் என்ற மாவட்டத்தின் பெயர் ஸ்ரீ அயோத்தியா மாவட்டம் என பெயர் மாற்றம், அயோத்யாவில் வருகிறது புதிய மருத்துவக்கல்லூரி மற்றும் விமான நிலையம் : தீபாவளி திருநாளில் அயோத்யாவில் அறிவிப்பை வெளியிட்டார் யோகி ஆதித்யநாத்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  6 Nov 2018 12:21 PM GMT

ராமபிரான் பிறந்த இடமான அயோத்யாவில் சரயு நதிக்கரையில் உள்ள ராம் கதா பூங்காவில் தீபாவளி திருநாள் கொண்டாட்டங்களில் உத்தர பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் பங்கு பெற்றார். ஆண்டு தோறும் அயோத்யாவில் லட்சக்கணக்கான விளக்குகளை ஏற்றும் ஆன்மீக சடங்கு தீபாவளி அன்று நடைபெற்று வருகுறது. அந்த வகையில் இந்த ஆண்டும் 3 லட்சம் விளக்குகளை ஏற்றும் தீபாவளி சடங்கு நடைபெறுகிறது. உத்திர பிரதேச கவர்னர் மற்றும் அமைச்சர் பெருமக்களும் இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர். அயோத்தியா ராமஜென்ம பூமி இயக்கத்திற்காகவும், அயோத்யாவில் ராமர் கோவில் கட்டுவதற்கு அரும் பாடு பட்டு வரும் சாதுக்களையும் சன்யாசிகளையும் வரவேற்று, அனைவருக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதல்வர் யோகி. நாட்டின் உள்ள கோடிக்கணக்கான ஹிந்துக்களின் கவனமும் இன்று அந்த நிகழ்வை உற்று நோக்கி தான் இருந்தது.
இந்த நிலையில், ராமபிரான் பிறந்த இடமான அயோத்யாவில், புதிய மருத்துவ கல்லூரி நிறுவப்பட உள்ளது. ராமபிரானின் பெயரில் புதிய விமான நிலையம் உருவாக்கப்பட உள்ளது. மேலும், பயிசாபாத் என்ற மாவட்டத்தின் பெயரை ஸ்ரீ அயோத்தியா மாவட்டம் என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது.
முக்கிய விருந்தாளியாக தென் கொரிய அதிபரின் மனைவி, கிம் ஜுங் சூக் அயோத்தியா தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கு பெற்றார். சேலை அணிந்து கொண்டு பங்குபெற்ற அவர், சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசுகையில், "இந்த தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கு பெற்றதில் மிகவும் பெருமை அடைகிறேன். இந்தியாவையும் கொரியாவையும் அயோத்தியா இணைக்கிறது. ராமாயணம் கொரியாவிடனும் இணைந்துள்ளது. என்னை அயோத்யாவிற்கு அழைத்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்", என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஒரு புதிய உறுதிமொழியை ஏற்க இங்கு இன்று வந்துள்ளோம். நாம் அனைவரும் ராமபிரனை கொண்டாட இங்கு வந்துள்ளோம். பயிசாபாத் என்ற மாவட்டத்தின் பெயர் இன்று அயோத்யா மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அயோத்தியாவில் எந்த வகையான அநீதியையும் அனுமதிக்க முடியாது. அயோத்தியாவில் என்ன தேவை என்று நாட்டிற்கே தெரியும். நான் அயோத்யாவிற்கு வருகை தந்தது போல் வேறு எந்த முதல்வரும் இங்கு வருகை தரவில்லை. அயோத்தியா எங்களின் பெருமை. அயோத்யாவின் மரபை எங்களிடம் இருந்த பறிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். அயோத்யாவில் புதிய மருத்துவ கல்லூரி கட்டப்படும். அயோத்யாவில் பகவான் ராமபிரானின் பெயரில் புதிய விமான நிலையம் கட்டப்படும்", என்று பேசினார்.
கொண்டாட்டங்களில் பங்கு பெற்ற ஹிந்துக்கள் அனைவரும், "ராமர் கோவிலை கட்டுங்கள்" என்று கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து, சரயு நதிக்கரையில், அயோத்யாவில் 3 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு, அயோத்தியா நகரமே ஒளிமயமானது.
Inputs from Republic TV
Next Story