Top
undefined
Begin typing your search above and press return to search.

விவசாயிகளுக்காக ₹500 கோடி செலவில், காய்கறிகளை பதப்படுத்தும் திட்டம் : மத்திய மோடி அரசு

விவசாயிகளுக்காக ₹500 கோடி செலவில், காய்கறிகளை பதப்படுத்தும் திட்டம் : மத்திய மோடி அரசு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  7 Nov 2018 6:23 PM GMT

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் விவசாயம் துறை சார்ந்த திட்டங்களுக்கு அதிகளவிலான முக்கியத்துவம் கொடுத்துள்ளார். விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க நிதி ஆயோக் அதிகக் கவனம் செலுத்தும் என்றும் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.


2018-19ஆம் ஆண்டில் வேளாண்மை துறையை வளர்ச்சி அடையச் செய்ய வழங்கப்படும் விவசாயக் கடன் இலக்கு ₹11 லட்சம் கோடியாக உயர்த்துவதாகவும் கூறப்பட்டது. காய்கறி விலையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ₹500 கோடி செலவில் காய்கறி பதப்படுத்தும் கூடங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. பசுமை ஆபரேசன் என்ற பெயரில் இத்திட்டம் அழைக்கப்படுகிறது.


அண்மையில் உருளைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மூட்டை மூட்டையாக உருளைக் கிழங்குகளை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். இது போன்ற பிரச்சினைகளால் காய்கறிகளைப் பதனிட்டு பராமரிப்பதற்கு இத்திட்டம் விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும். எளிதில் அழுகக் கூடிய காய்கறிகளை சில நாட்களுக்கு பராமரித்து வைத்திருக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் காய்கறி பராமரிப்பு கூடங்கள் அமைக்கப்படும். மேலும் காய்கறிகளை விரைவாக நாட்டின் இதர பகுதிகளுக்குக் கொண்டு செல்ல ரயில், பேருந்து போன்ற போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும்.

Next Story