Top
undefined
Begin typing your search above and press return to search.

சேலம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி கொலை வழக்கில் 15 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை - ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய ஆணையம் வலியுறுத்தல்

சேலம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி கொலை வழக்கில் 15 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை - ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய ஆணையம் வலியுறுத்தல்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  7 Nov 2018 11:49 AM GMT

சேலம் மாவட்டத்தில் அண்மையில் 14 வயது சிறுமி ராஜலட்சுமியை  கொலை செய்த நபர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டம் (போஸ்கோ), குண்டர் சட்டம் ஆகியவற்றின்கீழ், நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்தை ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய ஆணையம் வலியுறுத்தியுள்ளதாக அதன் துணைத் தலைவர் திரு. எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சம்பவம் தொடர்பாக ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகக் கூறினார்.
கொலை செய்யப்பட்ட ராஜலட்சுமியின் குடும்பத்தினருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி, இடைக்கால நிவாரணமாக  4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் முதல் தவணை தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை கோரியுள்ள ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய ஆணையம், திருத்தப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் கூடுதல் நிவாரணம் வழங்குமாறும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தருமாறும் மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக திரு முருகன் தெரிவித்தார்.
போஸ்கோ சட்டத்தின்கீழ், இந்த வழக்கு விசாரணை நடத்தப்படுவதால், மகளிர் நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோல், தேனி மாவட்டத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக அவர் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் ஷெட்யூல்டு வகுப்பினர் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதி, வேறு திட்டங்களுக்கு திருப்பி விடப்படுவதாகக் கூறிய திரு முருகன், அண்டை  மாநிலங்களான ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் ஆகியவற்றில் இத்தகைய செயலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளதாகவும், தமிழகத்தில் அவ்வாறு இல்லை என்றும் தெரிவித்தார்.
மாநிலத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த திரு. முருகன், இது தொடர்பாக ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.   சேலம், அரியலூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பஞ்சமி நிலம் வர்த்தக நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அதை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மற்றும் மாநில அளவிலான அதிகாரிகளை அறிவுறுத்தி இருப்பதாகக் கூறினார்.
Next Story