Kathir News
Begin typing your search above and press return to search.

நிலக்கரி சுரங்க ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட ஜார்கன்ட் முன்னாள் முதல்வர் மது கோடா காங்கிரஸில் ஐக்கியம் - ஊழல் வாதிகள் அதிகம் இருக்கும் கட்சியாக தொடர்கிறது காங்கிரஸ் !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Nov 2018 7:28 AM GMT

ஜார்கன்ட் மாநிலத்தின் முன்னால் முதல்வரும், நிலக்கரி ஊழலில் தொடர்புடையவருமான மது கோடா காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி உள்ளார். நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அஜோய் குமார் முன்னிலையில் காங்கிரஸில் சேர்ந்தார். இவரது மனைவி கீதா கோடா சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் முன்னிலையில் காங்கிரஸில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டு, சுயேச்சையாக இருந்த கோடா ஜார்கண்டின் முதல்வராக பொறுப்பேற்றார். ராஷ்ட்ரிய ஜனதா தள், ஜார்கன்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் துணையுடன் முதல்வராக பொறுப்பேற்றார். அவர் தனது அரசியல் வாழ்க்கையை பா.ஜ.க வுடன் இணைந்தே ஆரம்பித்தார். 2005 ஆம் ஆண்டு, பா.ஜ.க இவருக்கு தேர்தலில் சீட் கொடுக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பா.ஜ.க அர்ஜுன் முண்டா தலைமையிலான அரசிற்கு ஆதரவளித்தார். அமைச்சர் பதவியை பெற்றார்.
ஒரு வருடம் கழித்து, கோடா மற்றும் மற்ற மூன்று சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க அரசாங்கத்திலிருந்து ஆதரவை விலக்கிக் கொண்டனர், மேலும் UPA உதவியுடன் அவர் முதல்வராக பொறுப்பேற்றார். இருப்பினும், அந்த ஆண்டு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு வழக்கில் அவரது பெயரையும், நீதிமன்றம் ஊழல், குற்றவியல் சதி மற்றும் மோசடி போன்ற குற்றச்சாட்டுகளை உருவாக்கியது.
ஜின்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் (ஜிஎஸ்எல்எல்), ககன் ஸ்போர்ட் அயன் பிரைவேட் லிமிடெட் (ஜி.எஸ்.ஐ.பி.எல்) ஆகியவற்றிற்கு அமிர்க்கோடா முர்கதன்கல் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்வதற்கு கோடா உதவியதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான கோடா காங்கிரஸில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story
கதிர் தொகுப்பு
Trending News