Top
undefined
Begin typing your search above and press return to search.

சர்கார் படத்திற்கு விழுந்த பேரிடி : உயர்நீதிமன்றத்தில் சென்று விழுந்த ஏ.ஆர். முருகதாஸ்

சர்கார் படத்திற்கு விழுந்த பேரிடி : உயர்நீதிமன்றத்தில் சென்று விழுந்த ஏ.ஆர். முருகதாஸ்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  9 Nov 2018 7:52 AM GMT

சர்கார் படத்தில் அரசுக்கு எதிரான சில காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் களங்கப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு விரல் புரட்சியாக தொடங்கிய சர்கார் இன்று கையெடுத்து கும்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜெயலலிதா இருந்த நேரத்தில் இந்த படம் எடுத்திருந்தால் மக்கள் விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட படம் என்று கூறலாம். ஒரு தலைமை மறைந்த பின்பு அவரை கொச்சை படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்கார் முழுக்க முழுக்க இன்றைய அரசியல் சூழநிலையை புரிந்து கொண்டு வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட படம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சர்கார் படத்தில் வில்லனாக நடித்த பழ.கருப்பய்யாவே விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார். அவரிடன் பேச்சிலேயே அந்த தோரணை தெரிந்தது என்று கூறியுள்ளார். இப்படி நடிக்க வருபவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நிலை வந்து விட்டால், மக்கள் பிரதிநிதி என்ற ஒரு வார்த்தையே கேலிக்கூத்தாகி விடும் என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள். அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாதவர்கள், அடுக்கடுக்காக வசனம் பேசி விட்டால், அரசியல் களத்தில் நுழைந்து விடலாம் என்று கனவு காண்கின்றனர். சினிமா அரசியல் வேறு, நிஜ அரசியல் வேறு. சினிமாவில் 50 வருடத்தில் நிகழும் மாற்றத்தை மூன்று மணி நேரத்திற்குள் காட்டி விடலாம். அதனை எப்படி வேண்டுமானாலும் மிகைப்படுத்தி ஒரு நடிகனை உச்ச நிலைக்கு கொண்டு சொல்லலாம். ஆனால் நிஜத்தில் அந்த மாற்றம் நடக்க 50 வருடம் மக்கள் போராட வேண்டும். பல இன்னல்களை அனுபவிக்க வேண்டும். இன்னல் என்றால் சினிமாவில் சண்டை காட்சியாக மட்டுமே வருமே தவிர மக்கள் பிரச்சனையை எடுத்தியம்பாது.
தற்போது சர்கார் படத்துக்கு தமிழகம் முழுவதிலும் எதிர்ப்பலை கிளம்பியுள்ள நிலையில், நேற்று இரவு அப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் கைது செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனமே அந்த தகவலை பகிர்ந்து பீதி கிளப்பியது. அதற்கு பிறகு தன் வீட்டிற்கு காவல் துறையினர் வந்தது உண்மை தான் என்றும், ஆனால் தான் வீட்டில் இல்லாத காரணத்தினால் காவல்துறையினர் திரும்பி சென்று விட்டதாகவும் முருகதாஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். தனது பக்கம் தவறு இருப்பதை உணர்ந்து கொண்டு நீதிமன்ற வாசலில் சென்று விழுந்துள்ளது சர்கார் படத்திற்கு விழுந்த பேரிடியாக பார்க்கப்படுகிறது.
Next Story