Top
undefined
Begin typing your search above and press return to search.

கிறிஸ்துவ மத பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்பில் வீடு : தெலுங்கானா தேர்தலில் கிறிஸ்துவ மதவாதத்தை கையிலெடுக்கும் காங்கிரஸ்

கிறிஸ்துவ மத பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்பில் வீடு : தெலுங்கானா தேர்தலில் கிறிஸ்துவ மதவாதத்தை கையிலெடுக்கும் காங்கிரஸ்

SG SuryahBy : SG Suryah

  |  9 Nov 2018 6:16 PM GMT

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. இதனை அடுத்து தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி, கிறிஸ்துவர்களுக்கான தேர்தல் அறிக்கையை கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி அறிவித்தது. அந்த அறிவிப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த அறிக்கையில் உள்ள அறிவிப்புகளை பார்த்தால், தெளிவாக கிறிஸ்துவ மத வாதத்தை காங்கிரஸ் கட்சி கையிலெடுப்பதாக தெரிகிறது. அதில் உள்ள அறிக்கைகள் கீழ் வருமாறு.
1) கிறிஸ்துவ பிஷப்களுக்கு, பாதிரியார்களுக்கு மற்றும் மதம் மாற்றுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
2) கிறிஸ்துவ பாதிரியார்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
3) கிறிஸ்துவ மைனாரிட்டி நிதி நிறுவனத்திற்கு நிதி வழங்கப்பட வேண்டும்.
4) மாநிலத்தில் கிறிஸ்துவ பவன் மற்றும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கிறிஸ்துவ கம்யூனிட்டி ஹால் நிறுவப்பட வேண்டும்.
5) மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மண்டலிலும் கிறிஸ்துவ தேவாலயங்கள் கட்ட நிலம் வழங்கப்பட வேண்டும்.
6) எஸ்.சி இன மக்களை தலித் கிறிஸ்தவர்களாக அங்கீகரிக்க மத்திய அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
7) அரசு நிலங்களை கிறிஸ்துவ மத இடுகாடுகளுக்கு ஒதுக்க வேண்டும். குறிப்பாக ஹைதெராபாத் மாநகரில் இதை நடைமுறை படுத்த வேண்டும்.
8) கிறிஸ்துவ மத யாத்திரைக்கு மானியம் வழங்கப்பட வேண்டும்.
9) கிறிஸ்துவர்களுக்கென்று நாடாளுமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் இடம் ஒதுக்கப்பட வேண்டும்.
10) கிறிஸ்துவ பத்திரிக்கையாளர்களுக்கு வீடு வழங்க வேண்டும். அவர்களின் மருத்துவ செலவு மற்றும் குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு அரசாங்கம் உதவி புரிய வேண்டும்.
[caption id="attachment_4856" align="alignnone" width="195"] Source : Twitter/ @karunasagarlib[/caption]
கிறிஸ்துவ வாக்கு வங்கியை கவர கிறிஸ்துவ மதவாதத்தை வெளிப்படையாக காங்கிரஸ் கட்சி கையிலெடுத்திருப்பது பலரையும் அதிர்ச்சிகுள்ளாக்கி இருக்கிறது. மதத்தின் பெயரால் இந்திய நாட்டை பிரித்து துண்டாட காங்கிரஸ் கட்சி முடிவெடுத்து விட்டதா என்ற கேள்வி எழுகிறது.
Next Story