Top
undefined
Begin typing your search above and press return to search.

"அரசியல் பொறுப்பு பேசும் சர்க்காருக்கு சமூக பொறுப்பு இருந்திருந்தால்" : பா.ம.க நிறுவனர் மரு. இராமதாசு காட்டம்

அரசியல் பொறுப்பு பேசும் சர்க்காருக்கு சமூக பொறுப்பு இருந்திருந்தால் : பா.ம.க நிறுவனர் மரு. இராமதாசு காட்டம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  9 Nov 2018 5:07 AM GMT

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “சர்கார்” படம் நேற்று தீபாவளியன்று வெளியானது. உலகம் முழுவதும் 2500 க்கும் அதிகமான திரை அரங்குகளில் வெற்றிகரமாக காட்சியாகிறது. ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளுக்கு ஆளாகி பல தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது வருகிறது.
அரசியல் படம் என்பதால், விறுவிறுப்பான காட்சிகள் பல உள்ளன. படம் முழுவதும் அ.தி.மு.க வை குறிவைத்தே காட்சிகள் இருந்தது என்பது அப்பட்டமாக தெரிந்தது. முதலமைச்சரை “ஒன்று” என்றும் துணை முதலமைச்சரை “ரெண்டு” என்று அழைப்பது EPS-OPS வை குறிவைப்பது தான் என்று மக்கள் கூறுகின்றனர். வில்லியாக வரும் வரலட்சுமியின் பெயர் கோமளவல்லி, இது ஜெயலலிதாவின் இயற்பெயர். அவரை மிக மோசமாக காட்டியுள்ளனர். இந்த திரைப்படம் Sun Pictures தயாரித்ததால் இந்த நிலைப்பாடா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த நிலையில்., இந்த திரைப்படத்திற்கு எதிராக அதிமுக கட்சியினர் போர்க்கொடி தூக்கவே பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. தற்போது, இது குறித்து கருத்து
தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், "அரசியல் பொறுப்பு பேசும் சர்கார் இயக்குனர் மற்றும் நடிகருக்கு சமூகப் பொறுப்பு இருந்திருந்தால் புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்கியிருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.


Next Story