Top
undefined
Begin typing your search above and press return to search.

2 ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் தீவிரவாதிகள் சுட்டு கொலை : காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அசத்தல்

2 ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் தீவிரவாதிகள் சுட்டு கொலை : காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அசத்தல்

SG SuryahBy : SG Suryah

  |  10 Nov 2018 5:44 PM GMT

தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா என்ற பகுதியில், டிக்கென் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து, பாதுகாப்பு படையினர், ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல் துறையின் சிறப்பு அதிரடி படை மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் கூட்டாக அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் என்று தினதத்தி
செய்தி குறிப்பு
தெரிவிக்கிறது.
அப்போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த தாக்குதலில், வஜீத் உல் இஸ்லாம் மற்றும் லியாகத் வானி ஆகிய 2 ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த செய்தி குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
Next Story