Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்திய ராணுவ வீரர்களுக்கு இனி புதிய ரக ஆயுதங்கள் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அசத்தல்

இந்திய ராணுவ வீரர்களுக்கு இனி புதிய ரக ஆயுதங்கள் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அசத்தல்

SG SuryahBy : SG Suryah

  |  10 Nov 2018 7:02 PM GMT

நாஸிக் மாவட்டத்திலுள்ள ஆர்டில்லரி மையத்தில், இந்திய ராணுவம், புதிய கே 9 வஜ்ரா, எம் 777 ஹொவிட்ஸர் ரக துப்பாக்கிகளை இணைத்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தவிர, துப்பாக்கிகளை இழுத்துச் செல்லும் கலப்பு வாகன அமைப்பும் இணைக்கப்பட்டது. எம் 777 ஹொவிட்ஸர் ரக துப்பாக்கிகள் 145 எண்ணிக்கையில் அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்ய, 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 5,070 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஈராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் செயல்பட்ட எம் 777 ஹொவிட்ஸர் ரக துப்பாக்கிகள், உயரமான பகுதிகளுக்கு எளிதாக ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்ல ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
https://youtu.be/eS1F8O7b0hk
Source : AIR News
Next Story