Top
undefined
Begin typing your search above and press return to search.

தொடர்ந்து சரியும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, மூடி மறைக்கப்படும் செய்தி ?

தொடர்ந்து சரியும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, மூடி மறைக்கப்படும் செய்தி ?

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  11 Nov 2018 2:39 PM GMT


கடந்த மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ₹1.50 குறைத்து மத்திய மோடி அரசு. எண்ணெய் நிறுவனங்கள் ₹1 இழப்பை ஏற்று கொள்ளும். இதனால், மத்திய அரசுக்கு ₹22,000 கோடி இழப்பு ஏற்படும்.


விலை குறைப்பை அறிவித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மாநிலங்களும் விலையை குறைக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையடுத்து பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்கள் விலை குறைப்பை அறிவித்தது.



இதனை அடுத்து கடந்த மாதம் 17ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ₹86.10-க்கும், டீசல் ₹80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹81.08-க்கும், டீசல் ₹76.89-க்கும் விற்பனை ஆனது என்று தினத்ந்தி செய்தி குறிப்பு
தெரிவிக்கிறது.
இந்த நிலையில் முந்தைய நாள் விலையை காட்டிலும் நேற்று 18 காசு குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ₹80.9-க்கு நேற்று விற்பனை ஆனது. அதே போல முந்தைய நாள் விலையை காட்டிலும் 17 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ₹76.72-க்கு நேற்று விற்பனை ஆனது. கடந்த 17-ந் தேதி முதல் நேற்று வரையிலான 24 நாட்களில் பெட்ரோல் 5 ரூபாய் 20 காசும், டீசல் 3 ரூபாய் 32 காசும் குறைந்திருக்கிறது என்று அந்த செய்தி குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து கொண்டே வந்திருந்த நிலையில், அனைத்து ஊடகங்கள் இதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தது. சரமாரியான விவாதங்களை நடத்தியது. எதிர் கட்சிகள் மத்திய அரசை கடுமையாக சாடின. ஆனால் தற்போது, பெட்ரோல் மற்றும் டீசல் கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் தற்போது இந்த செய்தி பெரிது படுத்தபடாமல் இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
Next Story