Top
undefined
Begin typing your search above and press return to search.

மதுக்கடையில் தஞ்சம் புகுந்த உண்ணாவிரத போராட்டகாரர்கள் : ஆண்டிப்பட்டியில் அரசியல் நாடகம்

மதுக்கடையில் தஞ்சம் புகுந்த உண்ணாவிரத போராட்டகாரர்கள் : ஆண்டிப்பட்டியில் அரசியல் நாடகம்

SG SuryahBy : SG Suryah

  |  10 Nov 2018 6:36 PM GMT

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், டி.டி.வி தினகரன் தலைமயிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள், பசிதாங்க முடியாமல் தேநீர் கடைக்கும், பேக்கரிக்கும் படையெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பாலிமர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
ஆண்டிப்பட்டி வைகை அணை செல்லும் சாலையில் அ.ம.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, பலர் பசிதாங்க முடியாமல் தேநீர் கடை மற்றும் பேக்கரிகளை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறினர் என்றும் அங்கு வடை, பப்ஸ், தேநீர் வாங்கி அவர்கள் பசியைப் போக்கினர் என்றும் அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
இன்னும் பலர் மதுக்கடையில் தஞ்சம் புகுந்ததாக கூறப்படுகிறது. தி.மு.க-வினரை போலவே தினகரன் தலைமையிலான அ.ம.மு.க கட்சியினரும் அரசியல் நாடகம் நிகழ்த்துவது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Picture Credits : Polimer
Next Story