Top
undefined
Begin typing your search above and press return to search.

ரபேல் விவகாரத்தில் காங்கிரஸின் பொய்யுரைகளுக்கு டசால்ட் நிறுவன தலைமை அதிகாரி கொடுத்த சாட்டையடி!

ரபேல் விவகாரத்தில் காங்கிரஸின் பொய்யுரைகளுக்கு டசால்ட் நிறுவன தலைமை அதிகாரி கொடுத்த சாட்டையடி!

SG SuryahBy : SG Suryah

  |  13 Nov 2018 12:55 PM GMT

பிரான்ஸ் நாட்டின், 'டசால்ட்' நிறுவனத்திடம் இருந்து, 'ரபேல்' போர் விமானங்களை வாங்குவதற்கான முடிவு எடுக்க மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் அடங்கிய ஆவணத்தை, மனுதாரர்களிடம், மத்திய அரசு சமர்ப்பித்துள்ள நிலையில் டசால்ட்  நிறுவன தலைமை செயல் அதிகாரி எரிக் ட்ரேப்பியரிடம் இருந்து இந்தியாவுடனான ரபேல் ஒப்பந்தம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.


பிரான்சிடம் இருந்து, இந்திய விமான படைக்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க, ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பா.ஜ.க மீது அவதூறு பரப்பி வருகிறார். இதற்கிடையே, ரபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோர், வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், 'ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான முடிவு எடுக்க, பின்பற்றப்பட்ட நடவடிக்கைககள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்' என, கோரியுள்ளனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்கள் கோரிய தகவல்களை அளிக்கும்படி, அக்டோபர் 30-ல் உத்தரவிட்டது.

இந்நிலையில், ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான முடிவு எடுக்க பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணத்தை, மனுதாரர்களிடம், மத்திய அரசு சமர்ப்பித்தது. ரபேல் விமானங்களின் விலைப்பட்டியல் குறித்த விபரங்கள், சீலிட்ட கவரில் வைத்து, மத்திய அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நேரத்தில் டசால்ட்  நிறுவன தலைமை செயல் அதிகாரி எரிக் ட்ரேப்பியர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ஒப்பந்தம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகாமாக வழங்கப்பட்டதாக கூறப்படும் அவதூறுக்கும், HAL நிறுவனம் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.


அதில் முதலாவதாக, ரபேல் போர் விமானங்களை, டசால்ட் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்தியாவிற்கு ரபேல் விமானம் சப்ளை செய்யும் விஷயத்தில் நான் பொய் கூறவில்லை. இந்த விஷயத்தில் நான் கூறியதும், வெளியிட்ட அறிக்கைகளும் உண்மையானவை. ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இருக்கும் நான் பொய் கூற மாட்டேன். டசால்ட் நிறுவனத்தின் பங்குதாரராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது எங்கள் நிறுவனத்தின் முடிவு தான். ரிலையன்ஸ் நிறுவனம் தவிர, மேலும் 30 நிறுவனங்கள் எங்கள் பங்குதாரராக உள்ளன. ரபேல் விமான ஒப்பந்தத்திற்கு இந்திய விமானப்படை ஆதரவு தருகிறது. தங்களின் பாதுகாப்பு முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு தேவையாக உள்ளது. மொத்த offset மதிப்பில் பங்கு நிறுவனங்கள் பத்து சதவிகித முதலீட்டை பெரும், அதன்படி அடுத்த ஐந்து வருடங்களில், பங்கு நிறுவனங்களில் தான் 400 கோடி முதலீடு செய்யப்படுகிறது' என்று கூறினார்.


அடுத்ததாக முதலில் போட்ட ஒப்பந்தத்தில், பறக்கும் நிலையில் 18 விமானங்களை அளிக்க வேண்டும். ஆனால், தற்போது போடப்பட்ட ஒப்பந்தத்தில், 36 விமானங்களை சப்ளை செய்ய வேண்டும். எனினும், 36 விமானங்களின் விலையும், 18 விமானங்களின் விலையும் ஒன்று தான். விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, விலையும் அதிகரிக்க வேண்டும். இது இரு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் என்பதால், விலை குறைப்பு குறித்து பேசப்பட்டது. விமானத்தின் விலையில், 9 சதவீதம் குறைக்க நான் ஒப்புக் கொண்டேன். ரிலையன்ஸ் நிறுவனத்தில் நாங்கள் பணம் முதலீடு செய்யவில்லை. டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இடையே உருவான பங்கு நிறுவனத்தில் தான் முதலீடு செய்யப்படுகிறது' என்று கூறியுள்ளார். மத்திய அரசு பறக்க கூடிய நிலையில் சப்பளை செய்ய போட்ட ஒப்பந்தத்தை, காங்கிரஸ் தயாரிக்கும் விலையுடன் தொடர்புபடுத்தி 40 சதவிகிதம் விலை அதிகம் என்ற புராணம் பாடி வருகிறது.


மூன்றாவது 126 போர் விமானங்கள் குறித்த பேச்சுவார்த்தையில், 108 விமானங்களை HAL நிறுவனம் மூலமாக கட்டமைப்பதில் இரு சிக்கல் இருப்பதாக தலைமை செயல் அதிகாரி எரிக் ட்ரேப்பியர் தெரிவித்துள்ளார்.


முதல் சிக்கல் கால விரயம். HAL நிறுவனத்தால் விமானத்தை கட்டமைக்க எடுத்துக்கொள்ளும் நேரத்திற்கும், டசால்ட் நிறுவனம் எடுத்துக்கொள்ளும் நேரத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. HAL நிறுவனம் பிரான்ஸ் நாட்டை சேர்த்த டசால்ட் நிறுவனத்தை விட 2.7 மடங்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதாக அறிக்கை தெரிவிக்கிறது. HAL நிறுவனத்தால், ரபேல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது படி work share agreement-யை பூர்த்தி செய்ய முடியாது.


இரண்டாவது சிக்கல் பொறுப்பு. 108 போர் விமானங்கள் இந்தியாவில் HAL நிறுவனத்தால் கட்டமைக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். மீதி உள்ள 18 விமானங்களுக்கு மட்டுமே டசால்ட் நிறுவனம் பொறுப்பேற்றுக்கொள்ளும். அது குறித்த விடயங்களுக்கே பதில் சொல்ல கடமைப்பட்டதாகி விடும். மற்ற 108 விமானங்களை பற்றி அவர்களிடம் கேள்வியெழுப்ப முடியாது.


இது தவிர காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா-பிரான்ஸ் இடையேயான ரபேல் ஒப்பந்தத்தில் பொய்யான தகவலை கூறி தாக்குதல் நடத்துவதாக தலைமை செயல் அதிகாரி எரிக் ட்ரேப்பியர் வேதனை தெரிவித்துள்ளார்.


Featured Image Credit - ANI

Next Story