Top
undefined
Begin typing your search above and press return to search.

கருப்புப் பணத்தை வெள்ளையாக்க, கெஜ்ரிவால் ரகசிய பயணம் செய்கிறாரா ? : டெல்லி பா.ஜ.க பரபரப்பு குற்றச்சாட்டு

கருப்புப் பணத்தை வெள்ளையாக்க, கெஜ்ரிவால் ரகசிய பயணம் செய்கிறாரா ? : டெல்லி பா.ஜ.க பரபரப்பு குற்றச்சாட்டு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  12 Nov 2018 8:30 PM GMT

கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் துபாய்க்கு ரகசிய பயணம் மேற்கொண்டிருப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.


இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி, காற்று மாசுபாட்டால் மக்கள் அவதிப்படும் நிலையில் கெஜ்ரிவால் தனது குடும்பத்துடன் துபாய் சென்றிருப்பது நியாயமா என்று கேட்டுள்ளார்.நன்கொடை என்ற பெயரில் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்த கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றவே அவர் அங்கு சென்றிருப்பதாகவும் மனோஜ் திவாரி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் இதை மறுத்துள்ள ஆம் ஆத்மி கட்சி, ஐ.ஐ.டி.யில் உடன் பயின்ற நண்பரின் இல்ல விழாவில் பங்கேற்கவே கெஜ்ரிவால் துபாய் சென்று இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது.


கடந்த வருடம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலில் ஈடுபட்டதாக அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா குற்றம்சாடியிருந்தார். கட்சியில் ஏற்பட்ட மோதல் காரணமாக கபில் மிஸ்ராவை அமைச்சரவையில் இருந்து  கெஜ்ரிவால் நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஊழல் புகாரில் சிபிஐ விசாரணை வளையத்தில் இருக்கும் அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் 2 கோடி ரூபாய் பணம் பெற்றதாகவும்  கபில் மிஸ்ரா கூறியிருந்தார். முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்சித் குறித்து ஊழல் புகார் அளித்த போதும் கெஜ்ரிவால் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கபில் மிஸ்ரா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story