Top
undefined
Begin typing your search above and press return to search.

முதலாம் உலகப்போரில் பங்குபெற்ற இந்திய வீரர்களை பெருமைப்படுத்தும் பிரதமர் மோடி

முதலாம் உலகப்போரில் பங்குபெற்ற இந்திய வீரர்களை பெருமைப்படுத்தும் பிரதமர் மோடி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  12 Nov 2018 8:10 PM GMT







முதலாம் உலகப் போர் முடிவடைந்து நேற்றுடன் (நவம்பர் 11) நூற்றாண்டு நிறைவு பெறுகிறது. உலக அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப்போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன. இதன் அளவும், செறிவும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பெரிதாக இருந்தது. பெருமளவினர் சண்டையில் ஈடுபட்டிருந்ததோடு பெரும் தொகையில் இழப்புகளும் ஏற்பட்டன.


60 மில்லியன் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய சுமார் 70 மில்லியன் போர்வீரர்கள் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். புதிய தொழில்நுட்பங்களின் வழிவந்த இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தரமான கனரகப் பீரங்கிகள், மேம்பட்ட போக்குவரத்து, நச்சு வளிமம், வான்வழிப் போர்முறை, நீர்மூழ்கிகள் என்பன போரின் தாக்கத்தைப் பெரிதும் அதிகப்படுத்தின. போரில் 40 மில்லியன் பேருக்குக் காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. இதில் குடிமக்களும், போராளிகளுமாகச் சுமார் 20 மில்லியன் பேர் இறந்தனர். போரினால் ஏற்பட்ட, முற்றுகைகள், புரட்சிகள், இன ஒழிப்பு, நோய்த் தொற்றுக்கள் என்பன மக்களுடைய துன்பங்களை மேலும் அதிகப்படுத்தின.


இப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது.  முதலாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்துக்காகப் பல்வேறு நாடுகளில் இந்திய வீரர்கள் போரிட்டு உயிர்த்தியாகம் செய்தனர். முதல் உலகப்போர் முடிந்ததன் நூற்றாண்டு நிறைவையொட்டி இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் முதலாம் உலகப் போரில் இந்தியா நேரடியாக ஈடுபடாவிட்டாலும் உலக அமைதிக்காக இந்தப் போரில் பங்கேற்று உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்களை நினைவுகூர்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இன்றும் உலகின் பல்வேறு நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஐ.நா. அமைதிகாக்கும் படையில் இந்திய வீரர்கள் பணியாற்றிப் போரிட்டு வருவதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். உலக அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.







Next Story