Top
undefined
Begin typing your search above and press return to search.

உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்தை வெற்றிகரமாக நடத்தி காட்டிய மத்திய மோடி அரசு

உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்தை வெற்றிகரமாக நடத்தி காட்டிய மத்திய மோடி அரசு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  12 Nov 2018 8:22 PM GMT

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இயக்கப்படும் முதலாவது சரக்குக் கப்பலை, பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசியில் வரவேற்றார்.


உள்நாட்டு நீர்வழி போக்குவரத்துத் துறையில் பெரிய மைல்கல்லாக கொல்கத்தா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட உள்நாட்டு கப்பல் ரவீந்திரநாத் தாகூர், தேசிய நீர்வழிப் பாதை வழியாக பயணித்து வந்தடைந்தது.  பெப்சி நிறுவனத்தின் பொருட்கள் அடங்கிய 16 கண்டெய்னர்களுடன் இந்தக் கப்பல் நேற்று (நவம்பர்  12), பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியை வந்தடைந்தது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சரக்கு கப்பலை வரவேற்றார்.


அத்துடன், கங்கை நதியில் நான்கு கரைகளை இணைக்கும் படகு போக்குவரத்து முனையங்கள் அமைக்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். குறைந்த செலவில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் நீர் வழிப் போக்குவரத்தை ஊக்கப்படுத்த ஜல் மார்க் விகாஸ் என்ற படகு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வாரணாசியுடன்  ஹால்தியாவை இணைப்பதற்கான மிகப் பெரிய இயந்திரப் படகுகள் இயக்கப்பட உள்ளன.  கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் கால்வாய்த் திட்டங்களுக்கும்  பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டினார்.


துறைமுகங்களில் சரக்கு கையாளுவதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியானது 4 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை கண்டிராத வகையில் ஒரே ஆண்டில் 71 மில்லியன் டன் ஓராண்டிற்கு சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய பகுதிகளுடன் தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் ஈரான் நாட்டுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. கங்கையாற்றின் வழியாக உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து வசதியை உருவாக்குவதற்கென ஜல் மார்க் விகாஸ் திட்டமும் ( நீர்வழி போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம்)  அறிமுகபடுத்தப்படவுள்ளது

Next Story