Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியா போன்ற அதிகளவில் எண்ணெய் வாங்கும் நாடுகளை, எண்ணெய் உற்பத்தி நாடுகள் கருத்தில் கொள்ள வேண்டும் : அபுதாபியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு

இந்தியா போன்ற அதிகளவில் எண்ணெய் வாங்கும் நாடுகளை, எண்ணெய் உற்பத்தி நாடுகள் கருத்தில் கொள்ள வேண்டும் : அபுதாபியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு

SG SuryahBy : SG Suryah

  |  14 Nov 2018 3:01 PM GMT

எரிசக்தித்துறையில் விலை ஏற்ற-இறக்கம் நிறுத்தப்பட வேண்டும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார்.



நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கச்சா எண்ணெய்க்கு விலை நிர்ணயம் செய்யும்போது, இந்தியா போன்ற அதிகளவில் வாங்கும் நாடுகளை, எண்ணெய் உற்பத்தி நாடுகள் கருத்தில் கொள்ள வேண்டும் என கூறினார்.கடந்த 4 ஆண்டுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில், மிகப்பெரிய முன்னேற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்தி இருப்பதாகவும்,  எரிசக்தித்துறை பாதுகாப்புக்காக, கொள்கைகளை புதுப்பித்து வருவதாகவும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். நாடு முழுவதும் 8 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிவாயுத்துறைக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருவதாகவும் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.



அமெரிக்காவின் தவறான கொள்கை காரணமாக சர்வதேச சந்தையில், பெட்ரோலிய பொருட்களின் விலை கூடி வருவதாக கடந்த செப்டம்பரில்  தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்காவின் நடவடிக்கையால் , சர்வதேச அளவில் டாலருக்கு எதிரான உலக நாடுகளின் பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது என்றார். இந்திய ரூபாயின் மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்த தர்மேந்திர பிரதான்,  இதனால் தான் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து வருகிறது என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

Next Story