Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒட்டு மொத்த மோசடி கும்பலையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு திட்டம்!

ஒட்டு மொத்த மோசடி கும்பலையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு திட்டம்!

SG SuryahBy : SG Suryah

  |  14 Nov 2018 2:57 AM GMT

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வளர்ச்சித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முடிந்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கறுப்புப் பணம், கள்ள நோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது. ₹500, ₹1000 நோட்டுகள் மட்டும் ₹15.44 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தன. ஒட்டுமொத்தமாக ₹18 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது.


இந்த நடவடிக்கையால், உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வீட்டில் கறுப்புப் பணமாகப் பதுக்குவதும், ஊழல் செய்வதும் தடுக்கப்பட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டில் ஊழலும், கறுப்புப் பணம் புழங்குவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.கள்ள நோட்டுகளைத் தடுத்தல், தீவிரவாதத்துக்குப் பணம் செல்லுதைத் தடுத்தல், பொருளாதாரத்தைச் சீர்படுத்துதல், டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றைச் செயல்படுத்துவதிலும் பண மதிப்பிழப்பு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.


அதுமட்டுமல்லாமல், கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி மத்திய வருவாய் துறை 'ஆப்ரேஷன் கிளீன் மணி' என்ற பெயரில் நடவடிக்கையைத் தொடங்கியது. இதன் மூலம் 17.92 லட்சம் நபர்கள் செய்த பணப் பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவர்கள் யாரும் வருமான வரி செலுத்தவில்லை. இதில் 11 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் பதில் அளித்தனர். தீவிர கண்காணிப்பு மற்றும் பின்தொடர்தல் மூலம் பல முக்கிய நபர்கள் பிடிபட்டனர். இவர்களின் வருமான வரித் தாக்கல், பணம் டெபாசிட் செய்தது ஆகியவை ஒப்பீடு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கறுப்புப் பணம் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதால் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முடிந்ததாகத் தெரிவித்தார். சாலை அமைத்தல், மின் வழங்கல், ரயில்வே மின்மயமாக்கல், பள்ளிகள் கட்டுதல் எனப் பல்வேறு பணிகளை முடிப்பதற்குத் தேவையான நிதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்தான் கிடைத்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரு ரூபாயை அரசு செலவிட்டால் அதில் 15 காசு தான் மக்களுக்குச் சென்றதாகவும் 85 காசு எங்குச் சென்றதென்றே தெரியவில்லை என்றும் தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை பதுக்கப்பட்ட பணத்தை வெளிக்கொண்டுவந்ததாகவும் மோடி தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான போலி நிறுவனங்கள் ஒழித்துக் கட்டப்பட்டதாகவும் மோடி தெரிவித்தார்.

Next Story