Top
undefined
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அரசியல் முறியடிக்கப்படும் : பிரதமர் மோடி அதிரடி பேச்சு

காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அரசியல் முறியடிக்கப்படும் : பிரதமர் மோடி அதிரடி பேச்சு

SG SuryahBy : SG Suryah

  |  14 Nov 2018 3:13 PM GMT

காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அரசியல் முறியடிக்கப்பட்டு, மக்கள் வளர்ச்சித் திட்டங்களைப் பார்த்து பா.ஜ.க அரசுக்கு மீண்டும் வாக்களிப்பார்கள் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சமீபத்தில் 2 ஆயிரத்து ₹413 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வங்கக் கடலை இந்தியாவின் நதிகள் வழியாக இணைக்கும் முதல் தேசிய நீர்வழிப் போக்குவரத்து முனையத்தை வாரணாசியில் திறந்து வைத்த மோடி, 16 கண்டெய்னர்களுடன் கொல்கத்தாவில் இருந்து கங்கை நதியின் வழியாக பயணித்து வந்த ரவீந்திரநாத் தாகூர் என்ற சரக்கு கப்பலை வரவேற்றார். 34 கிலோ மீட்டர் தூரத்திற்கு, ஆயிரத்து ₹600 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட வாரணாசி வட்டச் சாலை மற்றும் பாபட்புர் விமான நிலைய தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மக்கள் வளர்ச்சித் திட்டங்களின் அடிப்படையில்தான் முடிவு எடுத்து வருகிறார்கள் என்றும், காங்கிரசின் வாக்கு வங்கி அரசியல் செல்லாது என்றும் தமது பேச்சில் குறிப்பிட்டார். நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த கடந்த 2014ம் ஆண்டு முதல் தமது தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் வெளிப்படையாக காணக் கிடைக்கின்றன என்று மோடி தெரிவித்தார். கங்கை நதியை சுத்தம் செய்வதில் தமது அரசு உறுதியாக இருப்பதாகவும் கூறிய மோடி இதற்காக ₹23,000 கோடி ரூபாயில் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் ஏற்கனவே ₹5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்
Next Story