Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்துக்களின் ஓட்டுக்காக காங்கிரசின் இரட்டை வேடம், ராகுல் காந்தியை விளாசிய யோகி ஆதித்யநாத்!

இந்துக்களின் ஓட்டுக்காக காங்கிரசின் இரட்டை வேடம், ராகுல் காந்தியை விளாசிய யோகி ஆதித்யநாத்!

SG SuryahBy : SG Suryah

  |  14 Nov 2018 3:06 AM GMT

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். சமீபத்தில் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் ராம ஜென்ம பூமிக்குச் சென்றார். அங்குள்ள கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளிலும் யோகி பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமர் பிறந்த அயோத்தியில் அவருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட உள்ளதாகக் கூறினார். அயோத்தியில் ராமர் சிலை வைக்க 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் ஒரு இடத்தில் ராமர் சிலை வைக்கப்படும் என்றும் யோகி தெரிவித்தார்.


அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில் மீண்டும் ராமர் கோவில் கட்டப்படுவது உறுதி என்றும் அவர் கூறினார். மேலும், அயோத்தியை முன்மாதிரி நகரமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் யோகி ஆதித்யநாதத் தெரிவித்தார்.


இந்த நிலையில், சத்தீஸ்கரில் துர்க் மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், நக்சல்களைப் புரட்சியாளர்களாகக் காங்கிரஸ் கட்சி சித்தரிப்பதாகக் குறிப்பிட்டார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மிகப்பெரிய தடையாகக் காங்கிரஸ் கட்சி உள்ளதாகவும் தெரிவித்தார். ஒருபுறம் அயோத்தி வழக்கை விசாரிப்பதை 2019 நாடாளுமன்றத் தேர்தல் வரை தள்ளிப்போடக் காங்கிரசின் கபில் சிபல் கோரியுள்ளதும், மறுபுறம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்துக் கோவில்களுக்குச் சென்று வருவதும் காங்கிரசின் இரட்டை வேடத்தை வெளிக்காட்டுவதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Next Story