Kathir News
Begin typing your search above and press return to search.

கடந்த 24 மாதங்களில் யூபிஐ மூலம் நடந்த பணபரிமாற்றம் 1500 மடங்கு அதிகரிப்பு

கடந்த 24 மாதங்களில் யூபிஐ மூலம் நடந்த பணபரிமாற்றம் 1500 மடங்கு அதிகரிப்பு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Nov 2018 8:10 PM GMT

கிழக்கு ஆசிய உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி, இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் சென்றார். தனது சிங்கப்பூர் பயணத்தின் போது, ஆசியன் -இந்தியா சந்திப்பிலும் கலந்து கொள்கிறார். அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸையும் பிரதமர் மோடி, தனது சிங்கப்பூர் பயணத்தின் போது சந்தித்து பேச இருக்கிறார்.
சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு, அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி தனது முதல் நிகழ்ச்சியாக சிங்கப்பூர் பின் டெக் உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், உலக நிதி மையமாக சிங்கப்பூர் திகழ்கிறது. இந்தியாவில் தற்போது தொழில் நுட்ப புரட்சி நடைபெற்று வருகிறது. 130 கோடி மக்களின் வாழ்க்கையை இந்த புரட்சி மாற்றி உள்ளது.உலக பொருளாதாரத்தின் வடிவம் மாறி வருகிறது. தொழில்நுட்பம், புதிய உலகின் போட்டியாகவும் ஆற்றலாக உள்ளது. இது எண்ணற்ற வாய்ப்புக்களையும் உருவாக்கி தருகிறது. 2014-க்கு முன்பு 50 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களே வங்கி கணக்கு வைத்திருந்தனர். 2014-ம் ஆண்டுக்கு பிறகு, ஒவ்வொரு குடிமகன், ஒவ்வொரு புறநகர் கிராமங்களும் வளர்ச்சி திட்டங்களால் வாழ்க்கை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளிலேயே 120 கோடி இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 128 வங்கிகள் யூ.பி.ஐ மூலம் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் யூபிஐ மூலம் நடந்த பணபரிமாற்றம் 1500 மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. மனித உள்கட்டமைப்பு அதிகமுடைய நாடு இந்தியா. விரைவில் உலகின் தொடக்க மையமாக இந்தியா மாறும். 120 கோடி பேருக்கு வங்கி கணக்கு அளிக்கும் மத்திய அரசின் நோக்கம் நிறைவேறி உள்ளது. நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், புதிய நிறுவனங்கள் துவங்குவற்கு ஏற்ற சூழல் இந்தியாவில் நிலவுகிறது. இந்தியாதான் உங்கள் மிகச்சிறந்த மையம் என்று அனைத்து பின் டெக் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் நிறுவனங்களிடம் நான் சொல்லிக்கொள்கிறேன்' கூறியிருந்த உலக நாட்டு தலைவர்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் உரையாற்றினர்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News