Top
undefined
Begin typing your search above and press return to search.

14 மெகா வேலைவாய்ப்பு மண்டலங்கள், ஓரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு - மாபெரும் திட்டம் !

14 மெகா வேலைவாய்ப்பு மண்டலங்கள், ஓரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு - மாபெரும் திட்டம் !

SG SuryahBy : SG Suryah

  |  15 Nov 2018 3:59 AM GMT

மத்திய கப்பல் போக்குவரத்து துறை சார்பில் கடலோர பகுதியில் 14 மெகா வேலைவாய்ப்பு மண்டலங்களை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. ஒரு லட்சம் கோடி செலவில் உருவாக இருக்கும் இந்த வேலைவாய்ப்பு மண்டலங்களுக்கு நிடி ஆயோக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிடி ஆயோக் குழுவின் ஒப்புதலுக்கு பிறகு, அமைச்சர் குழு பரிசீலித்து ஒப்புதல் கொடுக்கும். இந்த மண்டலங்களில் தொழிற்சாலையை அமைக்க அழைப்புவிடுக்கப்படும். வேலை வாய்ப்பு மண்டலங்களை உருவாக்குவதில், பிரதமர் அலுவலகம் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இவற்றின் மூலம், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என, பிரதமர் அலுவலகம் கூறி வருகிறது. இந்த மண்டலங்களில் அமையும் தொழிற்சாலைகளுக்கு பல நிதி சலுகைகள் வழங்கப்படும். தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, ஒற்றை சாளர முறையில் ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது
இந்த மண்டலங்களில், சிமென்ட், உணவு பொருள், மரப்பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆடைகள், தோல் பொருள், ஆபரண கற்கள், நகைகள் தயாரிப்பு உள்ளிட்ட, 35 தொழிற்சாலைகள் இடம்பெறும். இந்த திட்டத்திற்கான செலவை மத்திய அரசு மற்றும் மாநில அரசு சேர்ந்து ஏற்றுக்கொள்ளும். இதற்கு தேவையான 2000 ஏக்கர் நிலத்தை மாநில அரசு வழங்கும்.
தமிழகத்தின், நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார், வி.சி.ஐ.சி., எனப்படும், விசாகப்பட்டினம் - சென்னை தொழில் பாதை, ராமேஸ்வரம், குஜராத்தில் கட்ச், சூர்யபூர், சவுராஷ்டிரா, கேரளாவில் மலபார் உட்பட, 14 வேலைவாய்ப்பு மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன.
Next Story