Top
undefined
Begin typing your search above and press return to search.

ஊழலற்ற சர்க்கார் மோடி சர்க்கார் : இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் நேர்காணலின் சிறப்பு அம்சங்கள்

ஊழலற்ற சர்க்கார் மோடி சர்க்கார் : இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் நேர்காணலின் சிறப்பு அம்சங்கள்

SG SuryahBy : SG Suryah

  |  14 Nov 2018 8:40 PM GMT

இன்போசிஸ் நிறுவனத்தின் இணைநிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி அவர்கள் எகனாமிக் டைம்ஸ்பத்திரிக்கைக்கு பேட்டி ஒன்றைஅளித்துள்ளார். அதில், பாரத பிரதமர்திரு நரேந்திர மோடி தலைமையிலானஅரசில் ஊழல் இல்லை. அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை மக்கள் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவரின்எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்,
கேள்வி :
நரேந்திர மோடி அரசாங்கம் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் எவ்வளவு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது ?
பதில் :
ஊழலை குறைக்க, மத்தியில் பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை மிகவும் கடினமாக, ஒற்றை நோக்குடன் செயல்பட்டு வருகின்றனர். மத்திய அரசாங்க மட்டத்தில் ஊழல் புகார் என்ற ஒன்று அரிதாகவே உள்ளது. கர்நாடகாவில் என்ன நடக்கிறது என்றுஎனக்குத் தெரியவில்லை, ஆனால் கர்நாடக மாநில அரசாங்கத்திலும் ஊழல் குற்றச்சாட்டுகள் காணப்படவில்லை.
கேள்வி :
சமீபத்தில் ரபேல் ஒப்பந்தத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதே ?
பதில் :
ரபேல் ஒப்பந்தத்தில் உண்மை என்னவென்று எனக்குத் தெரியவில்லை. எனவே, நான் அதைப்பற்றி கருத்து தெரிவிக்கவிரும்பவில்லை
கேள்வி : பொதுவாக நீங்கள் சொல்கிறீர்களே...
பதில் :
தனிப்பட்ட முறையில், பிரதமர் அவர்கள் ஒரு வலுவான, பொருளாதார முன்னேற்ற சிந்தனை கொண்ட அரசாங்கத்தை வழி நடத்துகிறார். மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம் மற்றும் மற்ற விஷயங்களில் நல்லமுன்னேற்றங்கள் நடந்துள்ளன. இந்த நாடு மிகவும் சிக்கலானது. மத்திய அரசு மற்றும் பல மாநில அரசாங்கங்களுடன் மிக சிக்கலான ஜனநாயக கட்டமைப்பாக இருக்கிறது. மாநில அரசாங்கத்தின் முழு உரிமைகளும் உள்ளன. மத்திய மோடி சர்க்கார் சாதித்துள்ளவை அனைத்தும் உற்சாகம் அளிக்கப்பட வேண்டியவை. நாம் அனைவரும் அதற்கு நன்றிக்கடன் பட்டு வளர்ச்சிகளை ஆக்கப்பூர்வமாக அணுகவேண்டும்.
கேள்வி :
GST,IBC போன்ற முக்கிய சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, யாரும் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதில்லை என்றாலும், அமல்படுத்தப்பட்ட விதத்தை பற்றி கேள்விகள் எழுகின்றன. அந்த சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு வேறு ஏதேனும் சிறந்த வழி இருக்கிறதா?

பதில் :
அமல்படுத்தப்பட்ட முறைக்கு பிரதமர் எப்படி பொறுப்பேற்பார்? அது, மத்திய மற்றும் மாநில அளவில் உள்ள அரசு அதிகாரிகளின் செயல் ஆகும். ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கிராமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மோடியின் பொறுப்பல்ல. அவரது பொறுப்பு, பெரிய சிந்தனைகளுடன் கடுமையாக உழைத்து எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். இதை அனைத்தையும் பிரதமர் மோடி அவர்கள் திறம்பட செய்கிறார் என்று நினைக்கிறேன்.
எனவே அமல்படுத்தப்பட்ட முறைக்கு பிரதமரை பொறுப்பேற்க சொல்வது சரியானதல்ல. இங்கு பிரச்சினை இந்தியர்களின் மனநிலையில் உள்ளது. நமக்கு ஒழுக்கம் இல்லை. நாம் யாரும் நேரத்தை மதிப்பதில்லை. பொருளாதார மாற்றத்தை அடைவதற்கு முன்னர் இந்தியாவின் கலாச்சாரமாற்றத்திற்கான அவசரத் தேவை உள்ளது.
கேள்வி :
நாம் ஒரு மிக சிக்கலான நாடு என்றுசொல்கிறீர்கள், இப்படி இருக்க நாம்எப்படி அடைவது சாதிப்பது ?
பதில் :
பிரதமர் அவர்கள் ஒழுக்கம் மற்றும் தூய்மை மீது கவனம் செலுத்துகிறார்.இது ஒரு அசாதாரணமான  விஷயம். ஒவ்வொரு அரசியல், கார்ப்பரேட் அல்லது சமுதாயத் தலைவரும், ஒவ்வொரு கல்வியாளரும் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அக்கறை எடுத்துக்கொண்டு நல்ல பணி நெறிமுறைகளின் முக்கியத்துவம், நேர்மைக்கான முக்கியத்துவம் ஆகியவற்றை ஒவ்வொரு விவாதத்திலும் முன்னெடுத்தால் அவை இளைஞர்களின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

கேள்வி :
2019 ஐ நெருங்கியுள்ளோமே..

பதில் :
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் தனது "நான்குசுதந்திரம்" பற்றிய உரையில் வரையறுத்த படி, என்னை பொறுத்தவரையில், 1.3 பில்லியன் இந்தியர்கள் அனைவருமே நாட்டிற்குமுக்கியம். உண்மையான சுதந்திரம்என்பது நான்கு சுதந்திரங்களைவழங்குகிறது - கருத்து சுதந்திரம், மத சுதந்திரம், விருப்பதிலிருந்து சுதந்திரம் மற்றும் அச்சத்திலிருந்து சுதந்திரம். பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் பேசிய நான்கு சுதந்திரங்களை அனுபவித்து, உண்மையான ஜனநாயகம் என்று இந்தியாவை உருவாகுவதை  நான் விரும்புகிறேன்.
Next Story