Top
undefined
Begin typing your search above and press return to search.

சிறு, குறு தொழில்களுக்கு கடன் உதவி வழங்க விரைவில் ரிசர்வ் வங்கியில் தனி அமைப்பு : மத்திய மோடி சர்க்கார்

சிறு, குறு தொழில்களுக்கு கடன் உதவி வழங்க விரைவில் ரிசர்வ் வங்கியில் தனி அமைப்பு : மத்திய மோடி சர்க்கார்

SG SuryahBy : SG Suryah

  |  14 Nov 2018 7:59 PM GMT





சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் புரிவோருக்கு 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் கடன் அளிக்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து பேசினார்.


தொழில்துறை வளர்ச்சிக்காக அரசு எடுத்துள்ள முயற்சிகளை பட்டியலிட்ட மோடி, இதனால் தான் தொழில் தொடங்க சிறந்த நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா 4 ஆண்டுகளில் 23 இடங்களை கடந்து முன்னேற முடிந்துள்ளது என்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அரசு 12 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.


பின்னர், விண்ணப்பித்த 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கும் புதிய திட்டத்தையும் பிரதமர்  தொடங்கி வைத்தார். ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பிரதமர் மோடியை கடந்த 8ம் தேதியன்று சந்தித்ததில் சிறு, குறுந்தொழில்களுக்கு கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி விரைவில் ஒரு தனி அமைப்பை ஏற்படுத்துவது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.





Next Story